பிராமண சமாஜம் பாஜக கூட்டணிக்கு ஆதரவு !

பழனியில் தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநில தலைமையகத்தில் சங்கத்தின் தலைவர் ஹரிஹரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார்… அப்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் , தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் சார்பில் தலைவர் ஹரிஹர முத்து தலைமையிலான நிர்வாகிகள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து தங்களது ஆதரவினை தெரிவித்ததாகவும் கூறினார்.

 

logo right


மேலும் தமிழகத்தின் 40 மக்களவை தொகுதிகளிலும் களப்பணியில் ஈடுபட்டு பாஜக கூட்டணிக்கு பணியாற்றி வெற்றிக்கு உதவ செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளதாகவும், தமிழகத்தில் வசிக்கும் வாக்குரிமை உள்ள 40 லட்சம் பிராமணர்கள் அனைவரும் தவறாமல் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென மாநிலத் தலைவர் ஹரிஹர முத்து தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.