காங்கிரஸ் கட்சியை முடக்குவதற்கு ஐடியா கொடுத்தவர் யார் தெரியுமா ?
காங்கிரஸ் கட்சியின் மீதும் கட்சித் தலைவர்கள் மீதும், இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மீதும் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை முடக்குவதில் குறியாக இருக்கும் பா.ஜ.க, அரசு, காங்கிரஸ் கட்சியின் நிதியை முடக்கி உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் ஆட்சிக்கு பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காக, இண்டியா கூட்டணி வலுவடைந்து விடக் கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கிற்கு இன்று வரி விதிப்பு செய்கின்றனர். 2017 முதல் 2024ம் ஆண்டு வரை 1,823 கோடி வரி விதிப்பு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.,க்களிடம் இருந்து 14 லட்சம் நகை, பணமாக பெற்றதற்கு, 45 நாட்கள் கணக்கில் காட்டப்படவில்லை, என்று காரணம் கூறுகின்றனர்.
இதற்கு 132 கோடி வரிவிதிப்பு செய்துள்ளனர். இண்டியா கூட்டணியின் வளர்ச்சி பா.ஜ.க, கட்சியினருக்கு காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில், 42 கோடி ரூபாய் பா.ஜ.க, கட்சிக்கு நிதி பெறப்பட்டுள்ளது. 14 லட்சத்து 132 கோடி ரூபாய் வரி விதிப்பு செய்தவர்கள், 42 கோடிக்கு 4,200 கோடி வரி விதிப்பு செய்திருக்க வேண்டும். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்றவை ஒருதலைப் பட்சமாக இயங்குகிறது.
காங்கிரஸ் கட்சியின் பணம் முடக்கத்தை, ஒவ்வொருவரின் உரிமையை பறிக்கும், ஜனநாயக படுகொலையாக பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை முடக்கி விட்டால், வரும் தேர்தலில் போட்டியிடும் வீரியத்தை குறைத்து விடலாம் என்று திட்டமிடுகின்றனர். இதுவரை, இந்தியா வரலாற்றில், மாநில முதல்வரை கைது செய்ததில்லை. காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கணக்கு முடக்கத்தை ஐ.நா., சபை கண்டித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை முடக்குவதன் மூலம் எளிதாக வென்று விடலாம், என்பது பா.ஜ.க, கட்சியின் யுக்தி. இந்தியாவில் 4,000 சதுர கிலோ மீட்டர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதையும், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, கச்சத்தீவு மீட்பு பற்றி கேள்வி எழுப்பிய போதும் கண்டு கொள்ளாத பிரதமர், இப்போது, கச்சத்தீவு பிரச்னையை பற்றி பேசுகிறார். கச்சத்தீவு விவகாரத்தில், சட்ட விரோதமாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி உள்ளனர்.
தமிழக மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணக்கு போட்டு, கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுப்பதால், தமிழகத்தில் காலுான்றி விடலாம் என்று நினைக்கின்றனர். இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் இப்ராஹிம் தெரிவித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.