மக்களுடன் முதல்வர் முகாம் : மக்கள் முகம் சுழிப்பு !!

0

தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை இயக்குநர் அவர்கள் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடத்திட உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப., அவர்கள், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதன்படி, நேற்று (21.02.2024)ந்தேதி திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 21 மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தீர்வு கான அறிவுரை வழங்கப்பட்டது.

logo right

மேலும் 12 பழைய மனுக்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரித்து உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 37 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் அளித்த 269 மனுக்களில் 81 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டும், மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இம்முகாமில், காவல் துணை ஆணையர் தெற்கு, காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்

இதெல்லாம் உண்மை என்றாலும் கூட இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் ஒருவர் ஸ்ரீரங்கத்தில் இருந்து மனு விசாரணையில் கலந்து கொள்ள கே.கே.நகர் வர வேண்டியுள்ளது என வேதனைப்படுவதுடன் அந்தந்த ஏரியாவிலேயே முகாமினை நடத்த வரும் காலங்களில் திட்டமிட வேண்டும் என்கிறார்கள், அதுவும் சரிதேனே !.

Leave A Reply

Your email address will not be published.