CNG விலை இப்பொழுது மிகவும் மலிவாகிவிட்டது !
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், மும்பை மக்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. இங்கு சிஎன்ஜியின் விலை குறைந்துள்ளதாக செய்தி பரபரப்பை கிளப்பி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சிஎன்ஜி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இது ஒரு பெரிய பரிசு. மும்பையில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூபாய் 2.5 குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் துறையான மகாநகர் கேஸ் லிமிடெட் வழங்கும் சிஎன்ஜியின் புதிய விலை செவ்வாய்க்கிழமை இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு நடத்தும் மகாநகர் கேஸ் லிமிடெட் சிஎன்ஜியின் விலையை கிலோவுக்கு ரூபாய் 2.5 குறைத்ததால், இங்கு அதன் விலை தற்போது கிலோவுக்கு ரூபாய் 73.50 ஆக குறைந்துள்ளது.
முன்னதாக, பெருநகர மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிஎன்ஜியின் விலை கிலோ ரூபாய் 76 ஆக இருந்தது. தகவல்களின்படி, சிஎன்ஜி விலை குறைப்பு உள்ளீடு செலவுகள் குறைப்பு காரணமாக உள்ளது. சிஎன்ஜி விலை குறைப்பு வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தமிழகத்துக்கும் கொஞ்சம் கருணை காட்டுங்க ஆபிஸ்ர்ஸ்.