அடடே பலே பலே காங்கிரஸ் வாக்குறுதிகள்…

நாடாளுமன்ற தேர்தலுக்காக அந்ததந்த கட்சிகள் மாநில அளவிலும் இந்திய அளவிலும் தேர்தல் வாக்குறுகிதிகளை அளித்து வருகிறது அந்த வகையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர் அதில் மல்லிகார்ஜுனா கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
1.ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1லட்சம் வழங்கும்-மகாலட்சுமி திட்டம்
2.மத்திய அரசுப் பணிகளில்பெண்களுக்கு50 சதவிகித இட ஒதுக்கீடு செய்யபடும்
3. புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
4. விவசாய இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை
5. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
6. நீட் க்யூட் தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம்
7. மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்வி கடன் அரசே செலுத்தும்
8. பாஜக இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்படும் புதிய ஜிஎஸ்டி 2.0 இயற்றப்படும்
9. மாநில அரசுகளுடன் ஆலோசித்து தேசிய கல்விக்கொள்கை திருத்தி அமைக்கப்படும்
10. மாநில அரசுகளுக்கான நிதி பகிர்வை வழங்க புதிய கொள்கை வகுக்கபடும்

logo right

11. அண்டை நாடுகளால் மீனவர்கள் சுட்டுக் கொள்வதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும்
12. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டக் கூலி ரூபாய் 400 ஆக உயர்த்தப்படும்
13. மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகு பொதுப் பட்டியில் உள்ள சில பிரிவுகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்
14. முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் அக்னி பத் திட்டம் ரத்து செய்யப்படும்
15. எம் எல் ஏ அல்லது எம்பி கட்சி தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வரப்படும்
16. புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்படாது
17. நீதிபதிகள் நியமனத்திற்கு தேசிய துறை ஆணையம் அமைக்கப்படும்
18. நீட் தேர்வு தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்படும்
19. ஊடக சுதந்திரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்
20. ஆசிரியர்கள் கற்பிக்கும் வேலைகளை தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுவது தடுக்கப்படும்
21. அரசு தேர்வுகள் அரசு பதவிகளுக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும்
22. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய சந்தைகள் ஏற்படுத்தப்படும்
23. ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி கால்நடை மருத்துவக் கல்லூரி நிறுவப்படும்
24. திருமணம் வாரிசுரிமை தத்தெடுத்தலில் ஆண்கள் பெண்களுக்கிடையில் உள்ள வேறுபாடு களையப்படும்
25. மீனவர் சமுதாயத்துக்கு தனி வங்கி, மீன் பிடிக்க தனி துறைமுகங்கள் உருவாக்கப்படும்
26. சாதிவாரி கணக்கெடுப்பிலும் மீனவர் சமூகங்கள் கணக்கெடுக்கபட்டு அடையாள அட்டை வழங்கப்படும்
27. பெண்களுக்கு ஊதியத்தில் பாகுபாடு கட்டுவதை தடுக்க ஒரே வேலை ஒரே ஊதியம் அமல்படுத்தப்படும்
இவ்வாறு அறிக்கைகள் வெளியிடப்பட்டன, அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அதன்பின்னர் சித்தப்பா என கூப்பிடலாம் என அங்கிருந்து கலைந்து சென்றனர் நிருபர்கள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.