தாராசுரம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்…
கும்பகோணம் அருகே தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட்டில் செயல்படும் ஒரு மித்த வியாபாரிகள் கூட்ட மைப்பின் கோரிக்கைகள் தொடர்பாக கும்பகோ ணம் மாநகராட்சி ஆணையர் லெட்சுமணனை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டு கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிலையில் கோரிக்கைகள் குறித்தும், மாநகராட்சி ஆணையர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும் தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ரவி தலைமை தாங்கினார், சங்க துணை செயலா ளர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் புதிய ஒப்பந்ததாரர் வியாபாரிகளின் வாடகை வாகனங்களுக்கு வசூலிக்க வேண்டும், புதிய ஒப்பந்த தாரர் கூடுதல் வாடகை வசூலித்தால் வியாபாரிகள் தரக்கூடாது, தரைக் கடை வியாபாரிகளின் கடைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடை பெற்று வரும் வழக்கு முடியும் வரை 60 ரூபாய் மட்டுமே வாடகை தர வேண்டும், 3 மாத சந்தா வழங்கிட வேண்டும், தொடர்ந்து நடைபெற உள்ள அனைத்து கூட்டத்தி லும் வியாபாரிகள் தவறா மல் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது
Comments are closed, but trackbacks and pingbacks are open.