தருமபுரி : ரயில் திட்டத்திற்கு மட்டும் 260 கோடி ரூபாய் பெற்று தந்துள்ளதாக தருமபுரி எம்பி செந்தில்கும
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அருகில் 400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 50 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கான்கிரீட் தளத்துடன் கூடிய வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. உயர் வகுப்பு பயணிகள் காத்திருப்புக் கூடம், மகளிர் மற்றும் பொதுப்பயணிகள் காத்திருப்புக் கூடம் என மூன்று காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு நடைமேடையிலும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் இயந்திரம், நவீன கழிப்பிட வசதிகள், தானியங்கி நகரும் படிக்கட்டுகள்,டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் காரணமாக தருமபுரி ரயில் நிலையம் புதுப் பொலிவு பெற்று பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களிலும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளை பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் பேசும் போது… அம்ரித் திட்டத்தின் கீழ் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட தருமபுரி. மொரப்பூர். பொம்மிடி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. ஓமலூர் முதல் ஓசூர் வரை புதியதாக இரு வழி ப்பாதை அமைக்கப்பட உள்ளது.
ரயில் பாதை அமைக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி ரயில் நிலையம் 21 கோடி 34 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. 400 இருசக்கர வாகனங்கள் 50 கார்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் நகரும் படிக்கட்டுகள் பெண்கள் ஓய்வு அறை ஒவ்வொரு நடைமேடையிலும் வாட்டர்கூலர். பல ரயில்கள் தருமபுரியில் நிற்காமல் செல்கிறது அதனை நின்று செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
17வது நாடாளுமன்ற அமர்வில் தருமபுரி தொகுதியில் மட்டும் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே திட்டத்திற்கு நிதி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன், தென்மேற்கு ரயில்வே உதவி செயற்கோட்ட பொறியாளர் பிரசாந்த் திரிபாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.