நிலத்தை அபகரிக்க திமுக பிரமுகர் கொலை மிரட்டல் !
திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரஞ்சித் குமார். இவர் சுக்காம்பட்டியில் ஹாலோபிளாக் தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். ஏற்கனவே காண்ட்ராக்ட் பணியில் வேலை செய்த பொழுது சுக்காம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் உடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர் அகரம் பேரூராட்சியில் இளைஞர் அணி திமுக பொறுப்பாளராக உள்ளார். தன்னுடன் பணியாற்றிய ரஞ்சித் குமார் தனியாக ஹாலோ பிளாக் தொழிற்சாலை நடத்தி வருவதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் ரஞ்சித் குமார் தான் தன்னையும், தொழிற்சாலை பங்குதாரராக சேர்க்க வேண்டும் என பலமுறை கேட்டு உள்ளார். அதற்கு உடன்படாததால் பலமுறை மிரட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ரஞ்சித் அலுவலகத்திற்கு சென்று டேபிள் சேர் உள்ளிட்ட பொருட்களை சேதம் செய்துள்ளார். n அப்பொழுது ஊர் பெரியதவர்கள் சமாதானம் செய்து உள்ளனர். நேற்று காலை சுக்காம்பட்டி பிரிவில் உள்ள டீக்கடையில் ரஞ்சித் குமார் அமர்ந்து இருந்தபோது மணிகண்டன் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ரஞ்சித் மனைவி, குழந்தை மற்றும் தனது அண்ணன் வீட்டில் இருந்த குழந்தைகள் மற்றும் அண்ணன் மனைவி ஆகியோரை தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அங்கு இருந்த காரை அடித்து நொறுக்கியதாக தெரிவித்தனர்.
இது குறித்து வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்லும் பொழுது மணிகண்டன் மற்றும் அவர்கள் உறவினர்கள் வழிமறித்து மீண்டும் கொலை மிரட்டல் வைத்துள்ளனர். இந்நிலையில் உயிருக்கு பயந்த ரஞ்சித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். ஜெயலலிதா ஆட்சிக்கு மீண்டும் வர காரணமாக திமுக மீது பட்டி தொட்டி முழுக்க நில அபகரிப்பு புகார் பற்றித்தான் பேசினார் இந்நிலையில் மீண்டும் அதேபுகார் கிளம்பி இருக்கிறது.