இந்தியா கூட்டணியின் திருச்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் துவங்கிய நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டனர்.
இதில் சிறப்புரையாற்றிய துறை வைகோ… உங்களுக்கு எத்தனை சீட்டு கொடுக்க இருக்கிறார்கள் ? கண்டிப்பாக சீட்டு கொடுப்பார்களா ? என்று என்னிடத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்கள். நான் சொன்னேன் சீட்டே கொடுக்கவில்லை என்றாலும் இந்த அணியில் தான் நாங்கள் இருப்போம் என்றேன். நான் அரசியல் குடும்பத்தில் பிறந்திருக்கலாம் ஆனால் நான் அரசியல்வாதி அல்ல கனவில் கூட நான் அரசியலுக்கு வருவேன் என்றும் எண்ணி பார்க்கவில்லை.
நான் ஆசைப்பட்டு இந்த கட்சிக்கு வரவில்லை வலுக்கட்டாயமாக எங்களது கட்சிக்காரர்கள் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என் அப்பாவிற்கு முதுமை வந்து விட்டது எங்க அப்பா ஒரு சகாப்தம் எங்க அப்பாவிற்கு தலை குனிவு வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன் நான் சுயமரியாதைக்காரன் நான் செத்தாலும் நமது சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று கண்ணீர் சிந்தி கதறி அழுதார் துரை வைகோ. இதனால் அறிவாலயத்தில் கனத்த அமைதி ஏற்பட்டது. எங்கள் சின்னம் கிடைக்காவிட்டால் தொகுதியை துறந்துவிட்டு 40 தொகுதிகளிலும் சுற்றிச்சுழன்று வருவேன் எனவும் பேசியமர்ந்தார்.