திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார். வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 அரசியல் கட்சிகளுக்கிடையே தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ,ஆரணி இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் திருவண்ணாமலை வந்துள்ளார்.
இந்நிலையில் துர்கா ஸ்டாலின் இன்று மாலை திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் அண்ணாமலையார் ,உண்ணாமலை அம்மனை வணங்கி வழிபட்டார். பின்னர் ஆலயத்தில் பக்தர்களுக்கு துர்கா ஸ்டாலின் நீர், மோர் வழங்கினார். பிரச்சாரத்திற்கு ஸ்டாலினுடன் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினும் சென்று கோவில் கோவிலாக வழிபாடு செய்து வருகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.