வறுமையிலும் நேர்மை சபாஷ் மாநகராட்சி தூய்மை பணியாளர் !
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் விக்னேஸ்வரன் என்ற நபர் தனது ஒரு பவுன் தங்க சங்கிலியை தவறவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அப்பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் போது குப்பையில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை மாநகராட்சி தூய்மை பணியாளர் முத்துக்குமார் என்பவர் கண்டெடுத்து அதனை கோயில் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து தங்க சங்கிலியின் உரிமையாளர் விக்னேஸ்வரன் அதனை பெற்றுக் கொண்டார். மாநகராட்சி தூய்மை பணியாளரின் இந்த நேர்மையான செயலை அனைவரும் பாராட்டினர். இவரைப்போல ஒரு சிலர் இன்னும் இருப்பதால்தான் மழை பொழிகிறது என்றார்கள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் நல்ல மனம் வாழ்க !