பெருமாளும் வேண்டும் ! பெரியாரும் வேண்டும் ! உழைப்பவன் வேண்டாமா ?
திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் மதிமுக துரை வைகோ கலைஞர் அறிவாலயத்தில் கதறியழுத காட்சி அனைவரும் கலங்க வைத்தது இந்நிலையில் என்னதான் நடந்தது என அவர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அதிருப்தி பெருகி வருவதாக ஆதங்கப்படுகிறார்கள் அவர்கள் கட்சியினர்…
முதலாவதாக அறிவாலய பேச்சுவார்த்தையில் இரண்டு தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைக்க மறுக்கப்பட்டு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதாகவும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என கறார் காட்டியதாகவும் சொல்கிறார்கள், இரண்டாவதாக சிறுகனூரில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வளவள என்று பேசிக்கொண்டிருந்தவரை தலைவர் பேசவேண்டும் பேச்சை சட்டுனு முடிங்க என கூறியதை அங்கே செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் நன்றாக அறிவார்கள்.
அடுத்த நாள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்ய வந்த துரை வைகோ கோவிலைவிட்டு வெளியே வந்ததும் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என கேட்க அதற்கு உங்கள் தொகுதியில்தான் ஸ்ரீரங்கமும் வருகிறது ஆகவே வேண்டாம் எனக்கூற எனக்கு பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் எனக்கூறியிருக்கிறார் அதனையும் உடன் சென்றவர்கள் ரசிக்கவில்லை என்கிறார்கள்.
அடுத்த பிரச்சனையாக கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டணி கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் துரை வைகோ கருப்பு சட்டை அணிந்து வர அதனை கூட்டணிக் கட்சிப்பிரமுகர்கள் சுட்டிக்காட்டி இப்படி முதல் கூட்டத்திலேயே அதுவும் வாக்கு கேட்க நடக்கும் கூட்டத்தில் கருப்பு சட்டை தேவையில்லை சட்டையை மாற்றிக்கொண்டு வரச்சொல்லவும் என எவ்வளவோ எடுத்துக்கூறியும் மறுத்துவிட்டாம் அதனால் திமுகவின கொந்தளித்து விட்டார்களாம் மலைக்கோட்டை மாவட்டத்தை தன்னுடைய கண்ணசைவில் வைத்திருக்கும் அமைச்சர் நேருவிற்கு முன்னாலயே நான் போட்டியிடவிட்டாலும் நாற்பது தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வோம் என கண்ணீர் விட்டு கதறியதை திமுகவினர் ரசிக்கவில்லையாம், அட போட நம்ம அமைச்சர் மகன் பக்கத்து மாவட்டத்தில் நிற்கிறார் அவரை அங்கே சென்று ஆதரித்து பெரும் வெற்றியடைச்செய்வோம் எனக்கூறி இருப்பதாக திமுக வட்டாரத்தில் தகவல் சொல்கிறார்கள்.
அதேபோல காங்கிரஸார் நடத்திய அறிமுக கூட்டத்தில் இந்த துண்டை இடுப்புல கட்டுனா, நான் கோயிலுக்கு போறேன்னு அர்த்தம். அதே துண்டை தோளில் போட்டா பஞ்சாயத்துக்கு கிளம்பிட்டேன்னு நினைப்பாங்க. அப்படி அந்த பக்கமா துாக்கி வச்சா பட்டைய கிளப்பபோறார்னு பயப்படுவாங்க. இப்படி கூட அவரு பேசுவாரு எனக்கூறிய மாவட்ட தலைவர் தலைவர் கோவிந்தராஜன், ரெக்ஸ் இருவரும் மரியாதைக்கு ஒரு வணக்கம் கூட வைக்க மாட்டாரா என வடக்கு மாவட்ட செயலாளர் சேரனிடம் கேட்க, அவர் துரையின் காதில் விஷயத்தை எடுத்துச்சொல்ல நான் சொல்லலனு உனக்கு தெரியுமா உன் வேலையை பார்த்துக்கிட்டு போ என சக நிருபர்கள் மத்தியில் அவமானப்படுத்தி இருக்கிறார் அதன்பின் ‘இந்த காங்கிரஸ் கட்சி துண்டை தோளில் போட்டிருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஏன்னா, எனது தாத்தா வையாபுரி தீவிர காங்கிரஸ் கட்சிக்காரர்.’ திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி. சார்பில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அவர்கள் அணி வித்த துண்டை தோளில் போட்டுக்கொண்டு இதை மட்டும்தாங்க துரை வைகோ சொன்னாரு.
அதேபோல மதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை மலர் மன்னனுக்கு எல்லாமுமாக இருந்து அவர் மறைவிற்குப்பின் கட்சியை கட்டிக்காப்பாற்றி வரும் வெல்லமண்டி சோமுவுக்கும் மரியாதை கொடுப்பததில்லையாம் கேட்டால் அவர் நேருவோட ஆளுனு மறைமுகமாக குத்திக்காட்டுகிறாராம். இந்நிலையில் நான் தன்மானம் மிக்கவன் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் எனக்கூறியதோடு தன்னுடைய தந்தையின் மற்றும் இயக்கத்தினரின் வற்புறுத்தலால்தான் அரசியலுக்கே வந்தேன் என அறிவாலயத்தில் அனல் பறக்க பேசியிருந்தார் இதுவும் பலர் மத்தியிலும் அதிருப்தியை கிளப்பி இருந்தது.
திருச்சி மாமன்றத்தில் மொத்தம் 65 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அதில் இருவர் மட்டுமே மதிமுக கவுன்சிலர்கள் மற்றவர்களில் அதிமுக நீங்கலாக 59 பேர் திமுக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தனித்தனியாக இதுவரை சந்திக்கவே இல்லை கவுன்சிலர்களை கூட விடுங்க பார்க்க வேண்டாம்ங்க முன்னாள் மேயர் சுஜாதாவைக்கூட கூட்டணி க்கட்சிக்காரர் எனற முறையில் இதுவரை நேரில் சந்திக்கவில்லை என ஆதங்கப்படுகிறார்கள் சிலர்.
என்னதான் ஆச்சு என விசாரித்தால் அங்கே நடக்கும் லாபி அப்படிங்க கோவில்ல கூட இரண்டு துவாரக பாலகர்கள்தான் இருப்பார்கள் இவருக்கு மூம்மூர்த்திகள் அவர்கள் சொல்வதுதான் வேதவாக்கு என நினைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார், அது யாருங்க அப்படி எனக்கேட்டால் மூவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாம் துரை வைகோவை நெருங்கவிடாமல் செய்யும், முதலாமானவர் மணவை தமிழ்மாணிக்கம், இரண்டாமவர் செந்தில் அதிபன், மூன்றாவது பால சசிகுமார் என்கிறார்கள் இதனால் மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக காதைக்கடிக்கிறார்கள்.
எனக்கு பெருமாளும் வேணும் பெரியாரும் வேணும்னு சொன்னீங்களே அப்பு உழைக்க கட்சிக்காரங்க வேண்டாம அப்பு ஓட்டு போட மக்கள் வேண்டாமா அப்பு என கதறல் குரல் மலைக்கோட்டை மாவட்டத்தில் ஓங்கி ஒலிப்பதை தவிர்க்க வேண்டும் செய்வீர்களா நீங்கள் செய்வீர்கள்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.