எதிர்க்கட்சிகளை ஒழிப்பேன் என்று மோடி கூறுவது அகம்பாவத்தின் உச்சம்…
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வீதி வீதியாக சென்று வேலூர் பாகாயம், ஓட்டேரி, விருப்பாச்சிபுரம், பலவஞ்சாத்து குப்பம், ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் எம்எல்ஏ லதா உட்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பலர் உடன் இருந்தனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்த பட வேண்டும். எனக்கு கிடைத்திருக்கிற தற்போது தகவல்படி நாகையில் சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்களில் 300 ரூபாய் பணம் தருகிறேன் என்று கூறி இரண்டு டெண்டர்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர். தேர்தல் நடத்தை விதி அப்பட்டமாக மீறப்படுவது தெரிகிறது இது குறித்து நாகப்பட்டின மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளோம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலை ஒரு ஜனநாயக முறையாக நடத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் தேர்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு சுதந்திரமாக சுழற்சியாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு மோடியின் உத்தரவுகோ அடிப்படைய வேண்டிய அவசியம் இல்லாத ஒரு அமைப்பு ஆனால் நடைமுறை மோடியின் உத்தரவை செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாக மாறி உள்ளது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்க கூடிய ஆபத்துகளில் இதுவும் ஒன்று தேர்தல் தேதிகளை பிரதமரை கலந்து ஆலோசித்து இதுவரை வெளியிட்டு இருப்பது இதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்று தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.
1972ம் ஆண்டு கட்சத்தீவை இந்திரா காந்தி பிரதமராக இருக்கும் பொழுது இலங்கைக்கு கொடுக்கப்பட்டது இன்றைக்கு கச்சத்தீவு பற்றி பேசும் பிரதமர் மற்றும் பாஜகவினர் கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்டு இருக்கலாம் பத்தாண்டுகளில் கச்சத்தீவை மீட்காமல் அதை விட்டுவிட்டு இன்று பேசுவது மலிவான முறையில் வாக்குகளை பெற மிக மிக மோசமான முறையாகும் இத்தகைய பிரச்சாரத்தின் மூலமாக இத்தகையின் பிரச்சாரத்தின் மூலமாக மக்களின் வாக்குகளை பெற்று விட முடியாது மோடி அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறார்.
ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை 15 லட்ச ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதி தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதி மீனவர்களுக்கு கொடுத்த வாக்குறுதி இவை எதனையும் நிறைவேற்ற வில்லை மாறாக மதத்தை நம்பி ஜாதிய நம்பி கடவுளை நம்பி கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு தேர்தல் களத்தில் மக்களுக்கு கடவுள் மேல் இருக்கிற பக்தியை வைத்து மதத்தின் மீது இருக்கிற நம்பிக்கையை வைத்து வாக்கு சேகரிக்க முயற்சி செய்கிறார் அந்த முயற்சி ஒருபொழுதும் வெற்றி பெறாது தமிழ்நாட்டில் வேலூர் உட்பட பாண்டிச்சேரி ஒன்று நள்ளிரவு கூட்டணி ஒன்று கள்ளக் கூட்டணி இந்த இரண்டு கூட்டணியும் தமிழக மற்றும் புதுச்சேரி மக்கள் நிராகரிப்பார்கள்.
இயக்குனர் அமீரை அமலாக துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு. தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம் போதை பொருள் இறக்குமதி ஆவது குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்து இந்தியா முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும் மோடிக்கும் தெரியும் எரிகிற நெருப்பாய் முதலில் அங்கு தடுத்து நிறுத்தினாலே எரிகிற நெருப்பு நெருப்பை எடுத்தால் கொதி நின்றுவிடும் என்பதை போன்று அந்த போதை பொருளை தடுத்து நிறுத்தினாலே இந்தியாவின் எந்த மாநிலத்திலும் போதை பொருள் விற்பனையாகாது இன்றைக்கு பொருளை காரணம் காண்பித்து அதை ஒரு அரசியல் ஆக்கி அரசியல் பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற்று விடலாம் என்ற நற்பாசியில் மோடி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
மோடி தனது எக்ஸ்த்தலத்தில் திமுகவை குறித்து லட்சத்தீவை குறித்து பதிவிட்ட கருத்துக்கு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, மோடி எதிர்க்கட்சியே இருக்க கூடாது என்று நினைக்கிறார் அப்படி நினைப்பதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியுள்ளார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 கோடி ரூபாய் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 11 கோடி வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளனர் , ஆகவே எல்லா கட்சிகளையும் முடக்கிவிடலாம் இதற்கு முன்பு அவர் கூறினார் தேர்தலுக்குப் பிறகு திமுக தமிழ்நாட்டில் இருக்கவே இருக்காது என்று கூறியுள்ளார் இது அகம்பாவத்தின் உச்சம் எந்த ஒரு அரசியல் தலைவரும் மற்றொரு கட்சியை இருக்காது அழிந்து போய்விடும் அழித்து விடுவேன் என்று சொல்வது அகம்பாவத்தின் உச்சம் அகம்பாவத்தின் அடிப்படையில் மோடி பேசிக் கொண்டிருக்கிறார் அவருடைய கட்சியிலேயே எத்தனை வாரிசுகளுக்கெல்லாம் சீட் கொடுத்திருக்கிறார் என்பது அதை முதல் அவர் கணக்கு செய்யட்டும் மோடி கூறுகின்றார் 140 கோடி மக்களும் எனக்கு குடும்பம் முதலில் அவர் அவர் மனைவியுடன் சேர்ந்து வாழட்டும் வாழ்வதற்கும் முயற்சி செய்யட்டும் சொந்த மனைவியுடன் வாழ தெரியாதவர் வாழ முடியாத மனிதர் 140 கோடி மக்களையும் எனது குடும்பம் என கூறுவதற்கு என்ன யோகதை என்ன அருகதை உள்ளது என கடுமையாக சாடினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.