காலில் விழுந்த கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் !
கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வேடசந்தூர் பகுதிகளில் பெண்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்தார், தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன் இன்று வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை மேற்கு ஒன்றிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக பா.புதுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் கட்சி நிர்வாகிகளுடன் வழிபாடு செய்து ஸ்வாமிக்கு ஸ்பெஷன் பூஜை நடத்தினார்.அதன்பின் குளத்தூர், பாடியூர், கொசவபட்டி, பா.புதுப்பட்டி, காணப்பாடி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பெண்களின் கால்களில் விழுந்து விழுந்து தேர்தலில் வெற்றி பெற என்னை ஆசிர்வாதியுங்கள் என்று வணங்கி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். என்னதான் காசு இருந்தாலும் மனிதர்களை காலில் விழவைக்கும் ஒரே ஆயுதம் வாக்கு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் மக்களே நல்லவர்களை தேர்வு செய்தால் நாடும் செழிக்கும் நாமும் செழிப்போம்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.