இப்போ குத்துறம்யா… எப்படி குத்தபோறோம் பார் கே.சி வீரமணி காட்டம்…

0

கடந்த முறை உனக்கு போட்டு கொடுத்த சின்னத்திலேயே இந்த முறை நிக்குற என்ன நடக்குதுனுபாரு, வேலூர் பாஜக வேட்பாளரை (AC சண்முகம்) கடுமையாக சாடி பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் விட்டு அழும் பாட்சா வெல்லாம் இனி பலிக்காது மக்கள் தெளிவாக உள்ளனர், தமிழகத்திற்கு பாஜகவை கொண்டு வந்து விட்டதே திமுக தான் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பின்பு வேலூரில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வேலூரில் பேட்டியளித்தார் அப்பொழுது கூறியதாவது… வேலூர் மாவட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆதிமுக  கூட்டணி சார்பில் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி அறிமுக கூட்டம் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே ஆப்பு தலைமையில் நடைபெற்றது இது சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி கலந்து கொண்டு மருத்துவர் பசுபதியை அறிமுகம் செய்து வைத்தார் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர் இதில் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி தனக்கு வாக்குகள் அளிக்குமாறு வாக்கு சேகரித்தார்.

 

கடந்த முறை நம்மோடுகூட்டணியில்  இருந்தவர் இன்று எதிர் தரப்பில் போட்டியிடுபவர் நம்மை துரோகி என்கிறார்., நான் தான் யோக்கியன் என பேசி மக்களை ஏமாற்றி வருகிறார் என்னிடம் பணம் இல்லை எனக்கு சீட் வேண்டாம் என கடந்த முறை சொன்னார் எடப்பாடி தான் நிற்க்க வைத்தார். அதிமுகவினர் கடந்த முறை முதுகில் குத்தியதாக சொல்கிறார் இப்போ குத்துறம்யா வர தேர்தலில் எப்படி குத்தபோறோம் நீ பார் கடந்த முறை உனக்கு போட்டு கொடுத்த சின்னத்திலேயே இந்த முறை நிக்குற என்ன நடக்குதுனுபாரு நன்றிகெட்டவனாக பேசிகிறார் சாதியை வைத்து வெற்றிபெற நினைக்கிறார் தேர்தல் களத்தில் பார்ப்போம் என பாஜக வேட்பாளரை கடுமையாக தாக்கி பேசினார் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை வீழ்த்த அதிமுக எவ்வித வியூகத்தை கையாள போகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்க திமுக அரசின் அவலங்களை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆக எவையெல்லாம் முன்னிறுத்தி தான் தேர்தல் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் கண்டிப்பாக அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

logo right

 

திமுக அறிமுக கூட்டங்களில் அமைச்சர் துரைமுருகன் அழுவது குறித்து கேட்டதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் விட்டு அழும் பாட்சா வெல்லாம் இனி பலிக்காது மக்கள் தெளிவாக உள்ளனர் கடந்த முறையை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தான் ஜெயித்துள்ளார் இந்த தேர்தலில் மக்கள் இன்னும் தெளிவாக உள்ளனர் ஆகையால் அதிமுகவின் வெற்றி உறுதி பாஜகவுடன் கள்ளக் கூட்டணி அமைத்துள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளாரே என கேட்டதற்கு முதலமைச்சர் கூறுகின்றாரே பொறுத்திருந்து நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள் கடந்த காலங்களில்  தங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கிறார்கள் என்பதற்காகவே தமிழகத்திற்கு பாஜகவை கொண்டு வந்து விட்டதே திமுக தான் மத்தியில் ஆட்சி அமைக்க இழுபறி நிலை வந்தால் முதலில் ஆதரவு கொடுப்பது திமுகவாகத்தான் இருக்கும்  மக்கள் என்று தெளிவாக உள்ளனர்.

 

அதிமுக கடுமையாக போட்டியிட்ட கட்சி 2014 மற்றும் 2016 ஆகியவற்றில் தனித்துப் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கண்டது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கூட்டணி வைக்க வேண்டிய நிலை உருவானது ஆனால் மீண்டும் நாங்கள் தனித்து தான் போட்டியிடுகின்றோம் இருந்தாலும் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து கூட்டணியோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் அண்ணாவே சொன்னார் வாரிசுகளை முன்னெடுத்து வரக்கூடாது என்று இன்று அந்தக் கட்சியும் ஆட்சியும் அந்த வாரிசு கைகளில் போய்விட்டது எனக்கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.