அஷீகா கதீஜாவின் அசத்தல் ஐடியா !

வாக்காளர்களை கவர பல்வேறு உத்திகளை தேடும் வேட்பாளர்களுக்கு, கோழிக்கோடு முக்கத்தைச் சேர்ந்த பெண் அஷீகா கதீஜாவின் ஐடியா,   புது வித மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஓட்டுக்குக்கு துட்டு ‘ சமாச்சாரமெல்லாம் பிரச்சாரத்தில் இல்லாத கேரளாவில், வாக்காளர்களுக்கு ‘இனிப்பு’ கொடுப்பதே பெரிய விஷயம் என்பதை உணர்ந்த  அஷீகா கதீஜா, தான் தயாரிக்கும் சாக்லேட்கள் மீது வேட்பாளர்களின் சிரித்த முகத்தையும் அவர்கள் போட்டியிடும் சின்னத்தையும் அச்சிட்டு சில கட்சிக்காரர்களுக்கு விநியோகம் செய்தார்.

விஷயம் ‘க்ளிக்’ ஆனது, ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு ஆர்டர் அள்ளிக்கொடுக்க, படு பிசியாகி விட்டார் அந்த இளம் தொழிலதிபர். கேரளாவில் இருந்து மட்டுமல்ல தெலங்கானா, மகாராஷ்டிரா, அசாம் என ஆர்டர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதாம்.

logo right

“வடகரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஷாஃபி பரம்பில் என்பவரது படத்தை போட்டு கொஞ்சம் சாக்லேட்களை அவருக்கு அனுப்பி வைத்தேன். விஷயம் தொகுதி முழுக்க பரவியது. இதை கேள்விப்பட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளரான கே.கே.ஷைலஜாவின் ஆதரவாளர்கள், தங்களுக்கும் இது போன்ற சாக்லேட்டுகள் தேவை என ஆர்டர் கொடுத்தனர். அதன் பிறகு மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன” என்றவர், மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் பட்டப் படிப்பு  முடித்தவர்  இவர் எப்படி சாக்லேட் தொழிலில் இறங்கினார் என்பதை குறிப்பிடும்போது, “எனக்கு சாக்லேட்டுன்னா ரொம்ப பிடிக்கும். லேப் டெக்னாலஜி படிச்சதால ஒரு சாக்லேட் எடுத்து அக்கு வேறு ஆணிவேரா சோதனை பண்ணி,  பிறகு அதை எப்படி உருவாக்குவது என்பதையும் ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடிச்சேன். பிறகு படிச்ச படிப்பை விட்டுட்டு சாக்லேட் தயாரிக்கறதை தொழிலா செய்ய ஆரம்பிச்சேன். இப்ப பல்வேறு சைஸ்களில் தயாரித்தாலும் அதை நிறுத்திவிட்டு தேர்தலுக்காக இருபத்தி ஐந்து ரூபாய் விலையுள்ள குறிப்பிட்ட ரகங்களை மட்டுமே தயாரிக்கிறேன்” என்கிறார்.

டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்தும் இவரது சாக்லேட்டுகளுக்கு ஆர்டர்கள் வரத் துவங்கியிருக்கிறதாம். கணவர் ரோஷன் சுஹைல் தனது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கிறார் என்கிறார் பெருமையாக . பார்த்தும்மா ஐடி ரெய்டு கிய்டு வந்துடப்போகுது ! உழைத்து பிழைக்க தெரிந்தவர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

# விதுரன் செய்திகளை உடனடியாக வாட்ஸாப் மூலம் அறிய Follow this link to join my WhatsApp group : https://chat.whatsapp.com/KLk5FJo4GW12jznRd5ndVs

Comments are closed, but trackbacks and pingbacks are open.