நில அபகரிப்பு பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி…

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது வீரக்கல் கூத்தம்பட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர் கணபதி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி பாலமுருகன் என்ற மகன் மற்றும் பரிமளா என்ற மருமகள் உள்ளனர். கணபதிக்கு பூர்வீக இடம் இதே பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது.

logo right

இந்நிலையில் கணபதியின் தந்தை பழனிச்சாமி மற்றும் அவரது சகோதரர் கணேசன் .முருகன் நான்கு மேற்பட்ட உறவினர்கள் கணபதி இறந்தவுடன் கணபதியின் மனைவி மற்றும் மகன் பாலமுருகனுக்கு வீட்டையும் சொத்தையும் பிரித்து தர முடியாது என்று தொடர்ந்து மிரட்டி அடித்து வருவதாகவும் நேற்று இரவு அனைத்து உறவினர்களும் ஒன்றிணைந்து வீரம்மாள் பாலமுருகன் பரிமளா மற்றும் அவரது கைக்குழந்தையுடன் அடித்து விரட்டியதால் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதால் இரவு முழுவதும் சாலையில் தங்கி இருந்து விட்டு தங்கிவிட்டனர்.


காலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையுடன் வந்து பெட்ரோலை தலையில் ஊற்றி தற்கொலை முயற்சி ஈடுபட்டனர் பெட்ரோல் ஊற்றியவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு இருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை மீட்டு தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொத்து பிரச்சனைக்காக பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.