கும்பகோணமே கோணம்… கண்டாவரச் சொல்லுங்க !!
தேர்தல் வந்துடுச்சினாளே களை கட்டத்தொடங்கிவிடும் ஏரியாக்கள், எம்.எல்.ஏ தேர்தல் என்றால் சிட்டிங் எம்.எல்.ஏவிற்கு எதிராகவும் எம்.பி. தேர்தல் என்றால் எம்.பிக்கு எதிராகவும் சீண்டிப்பார்ப்பது வழக்கமான ஒன்றுதான் ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, கூட்டணி இறுதியாகவில்லை அதற்குள் களேபரம் ஏற்பட்டிருக்கிறது கும்பகோணத்தில்…
கும்பகோணம் மாநகரம் முழுவதும் கண்டா வரச் சொல்லுங்க எனும் தலைப்பில் எங்க தொகுதி MP யை எங்கேயும் காணவில்லை மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மக்கள் என்ற ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் கும்பகோணம் மாநகரம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக சார்பில் அவர் மீண்டும் இத்தொகுதியில் போட்டி மிட முயற்சி வரும் வேளையில் இந்த சுவரொட்டி திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.