எம்.எல்.ஏ கார் விபத்தில் உயிரிழந்தார் …

0

பி.ஆர்.எஸ். கட்சியின் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் உயிரிழந்தார். படான் செருவு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பு மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு  நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் லாஸ்யா நந்திதா தப்பினார் அப்போது அவர் பயணித்த கார் மீது ஆட்டோ மோதியதில், அவரது தலையில் காயம் ஏற்பட்டு தப்பினார்.

logo right

10 நாட்களில் இரண்டாவது விபத்தில் தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்டோன்மென்ட் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சயன்னா ஓராண்டுக்கு முன்பு இறந்தததால் அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி சீட் வழங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி தான் லாஸ்யாவின் தந்தையின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அதிலிருந்து 4 நாட்களில் மகள் மரணமடைந்தது அத்தொகுதி மக்கள் மட்டுமல்லாமல் தெலுங்கானவையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.