தமிழகம் : ஏழுமுறை வருகை எகிறியடித்த மோடி !

தி.மு.க.வின் குடும்ப அரசியலை இந்த தேர்தலோடு ஒழிக்க வேண்டும்.தி.மு.க.வுக்கு 3 கொள்கைகள் தான் முக்கியமான கொள்கைகள் ஒன்று குடும்ப அரசியல், இரண்டு ஊழல், மூன்றாவது தமிழ் கலாச்சாரத்தை அழிப்பது.  தி.மு.க.வின் மொத்த குடும்பமும் தமிழகத்தை சூறையாடி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 4,600 கோடிகளை மணல் கொள்ளை மூலம் சம்பாதித்துள்ளது. தி.மு.க.ஆட்சியில் போதை பொருள் மாஃ பாபியா கும்பல், மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி வருகிறது. இந்த போதை மாபியாவுக்கு ஆதரவு கொடுப்பது திமுக தான் என கடுமையாக பேசி தாக்குதல் நடத்தினார். தி.மு.க. பிரித்தாளும் சூழ்ச்சி செய்து தமிழக மக்களை மதம், ஜாதி பெயரால் பிரித்து வைத்து குளிர் காய்கிறது. மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். தி.மு.க.வை விரட்டி அடிப்பார்கள்.- என பிரதமர் மோடி நம்பிக்கையுடன் முழுங்கினார்.

logo right

காசி தமிழ் சங்கமும், குஜராத்தில் நடந்த சவுராஷ்ட்ரா தமிழ் சங்கமும் நமது தமிழின் பெருமை, அருமையைய, உயர்த்தி பிடித்தன. தமிழகத்தின் செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவினோம். அதை எதிர்த்தது தி.மு.க. தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்ல நான் முயற்சி செய்கிறேன். என வேலூர் கூட்டத்தில் பிரதமர் மோடி.

தி.மு.க. காங்கிரசின் கோர முகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கச்சதீவை தாரை வார்த்து தமிழக மீனவர்களை பரிதவிக்க விட்டவர்கள் காங்கிரஸ், தி.மு.க வினர். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்டு வந்தது நாங்கள். என முழுங்கினார் பிரதமர் மோடி. முதலில் வேலூர், மேட்டுப்பாளையம் அதன்பின் கோயம்புத்தூர் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டும் ஏழு முறை தமிழகம் வருகை புரிந்துள்ளார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் கனவு மெய்படுமா காலம்தான் பதில் சொல்ல வேண்டும் !.

Comments are closed, but trackbacks and pingbacks are open.