100 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் எப்படி விண்ணப்பிப்பது…
நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) இ மற்றும் டி, மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் டிரெய்னி ஆகியவற்றில் உள்ள அசிஸ்டெண்ட் ஃபோர்மேன் பதவிகளுக்கு தீவிரமான மற்றும் தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மேற்கூறிய பணியிடங்களுக்கு 150 இடங்கள் காலியாக உள்ளன. NCLன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 வயதுக்குக் குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மாத சம்பளம் ரூபாய் . 47, 330.25. UR, OBC மற்றும் EWS வகைகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1000மும் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது. கணினி அடிப்படையிலான தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் NCLன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.