உரலுக்கு ஒரு பக்கம் மத்தளத்துக்கு இரு பக்கம்… நேருவை வருத்தெடுக்கும் முத்தரையர்கள் !
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெப்பநிலை அதிகரிக்கும் அதிகரிக்கும் என பயமூர்த்திக்கொண்டிருக்க சூரியனையே சுட்டெரிக்கும் விதமாக அரசியல் களம் படு ஹாட்டாக இருக்கிறது குறிப்பாக திருச்சி மற்றும் பெரம்பலூரில்.
திருச்சியில் முக்கியமாக நால்வர் இடையேதான் போட்டி அதேபோல பெரம்பலூரிலும் நால்வரிடையேதான் போட்டி அதெல்லாம் சரி ஏன் திருச்சி, பெரம்பலூரை மட்டும் கையில் எடுக்கிறீகள் என தானே கேட்கிறீர்கள் எந்த குறிக்கோளுக்காக கட்சியைவிட்டு வெளியேறினாரோ வைகோ அதனை மறந்து அவர் மகன் துரை வைகோவை களமிறக்கி இருக்கிறார், மறுபுறம் மலைக்கோட்டை மாமன்னன் என்று அறியப்பட்ட கே.என்.நேருவின் மகன் பெரம்பலூரில் களமிறக்கப்பட்டுள்ளார் .
கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழர் தேசிய தலைவர் SSK என்கிற செல்வகுமார் பேசிய தீப்பிழம்பு பேச்சு அடங்குவதற்குள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்ட செயலாளர் 5000 வாலா சரவெடியை சாரி சாரி ஆட்டாமிக் பாமையே பற்ற வைத்திருக்கிறார். ராஜசேகர் பேச்சின் சாரம்சம் பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் நேரு மகன் அருண் போட்டியிடுகிறார். கடந்த 1989ல் அமைச்சராக இருந்த செல்வராஜுவால், ஒன்றிய செயலாளர் ஆக்கப்பட்டவர் நேரு. அதன் பின் சேர்மன் ஆகி அடையாளம் காட்டப்பட்ட நேரு, செல்வராஜ்க்கே சீட்டு கிடைக்க விடாமல் செய்தவர். அவர் மகனால் அரசியல் பதவிகளுக்கு வர முடியவில்லை. ஆனால் நேரு மகனை எம்பியாக்க முயற்சி செய்கிறார்.
முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் வடிவவேல், ரத்தினம், ஒன்றிய சேர்மன் செல்லாண்டி, அவைத் தலைவராக இருக்கும் பேரூர் தர்மலிங்கம், முசிறி பகுதியில் சேர்மேனாக இருந்த தங்கராசு, ஒன்றிய செயலாளராக இருந்த டோல்கேட் சின்னச்சாமி போன்ற பதினைந்து முத்தரையர் சமூகம் சார்ந்த திமுகவினர் குடும்பம் எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. அவர்கள் ஒதுக்கப்பட்டு அடியோடு நசுக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இரண்டு சதவீதம் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நேருவை, கடந்த 30 ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடனே வைத்துள்ளார்.

கள்ளர் சமூகத்தை சேர்ந்த சேகரன் ஒரு முறை தான் எம்எல்ஏவாக இருந்தார்.அதன் பின் அவர் தலை தூக்கவே முடியவில்லை, அன்பில் பெரியசாமி அவரையும் வளர விடவில்லை.திருவெறும்பூரில் ஒரு எம்எல்ஏ துரை இருந்தார் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. நாகவேணி வேலு என்பவரும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். நகரச் செயலாளராக இருந்த தங்கராசு குடும்பமும் அகற்றப்பட்டது. சாத்தனூர் சாமி அய்யா எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.செங்குறிச்சி கருப்பையா என முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த 10 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அதேபோல தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த குடமுருட்டி சேகர் என்பவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். லால்குடி சேர்மன் ஆக இருந்த பிச்சை போன்றவர்கள் குடும்பத்தில் ஒருவர் கூட அரசியலுக்கு வர முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் திமுகவில் உள்ள முத்தரையர், கள்ளர், தேவேந்தி குலவேளாளர் சமூகத்தினரை அழித்தவர் நேரு. பெரும்பான்மை சமூகத்தினரை படிப்படியாக அழித்து அதன் மீது ஏறி நிற்பவர் தான் நேரு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மூன்று சமூகத்தை சேர்ந்த 25 குடும்பங்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்திய நேரு அவரது மகனை எம்பி ஆக்க துடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவரது வீட்டில் குடும்ப பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது.
அதே சமயம் அவரது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு திமுகவில், கதிரவனை மண்ணச்சநல்லூர் பகுதியில் எம்எல்ஏ, ஆக்கியுள்ளார். மண்ணச்சநல்லூர், முசிறி சேர்மன், துறையூர், உப்பிலியபுரம் ஒன்றிய பொறுப்பாள்களாவும், அறங்காவலர் குழு பொறுப்பிலும் நியமித்து உள்ளார். தனிப்பட்ட சமூகத்தை வளர்த்துக் கொண்டிருப்பது ஜனநாயக அரசியலா ?சர்வாதிகாரம் தானே. எனப்பொறிந்து தள்ளிவிட்டார்.
அவரது அரசியல் காலம் முடிவு விரைவில் முடிவுக்கு வரும் இவ்வாறு அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து ராஜசேகரை தொடர்புகொண்டோம் ஏன் இப்படி ஏன் எப்படி எதற்காக என என்ன சார் கேள்வி உண்மையைச்சொன்னேன், என்றவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்ல மறந்த ஒன்றையும் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் தற்பொழுது அவர்கள் கட்சியில் மாநில பொறுப்பில் இருக்கும் கவிஞர் சல்மாவை என்னபாடு படுத்தினார் என்பது தெரியுமா அதேபோல மதிமுக டாக்டர் ரொக்கையாவை ஏன் மதிமுக கூட்டணியில் அறிவிக்கவில்லை உள்ளூர்காரர்கள் வந்தால் தாம் விலை போகமாட்டோம் என்பது அவருக்கு நன்றாக தெரியும் காய்கறி விற்றவரிடமும் டீக்கடை நடத்தியவரிடமும் தோல்வியை சந்தித்த நேரு தன்னுடைய தொகுதியை நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியாத நேரு மகனை மன்னராக்க பார்கிறார் பாருங்கள் என்னவாகப்போகிறது என்று என அலைப்பேசியை துண்டித்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.