ஆணையர் அதிரடி திடீர் விசிட்டால் பதறியடித்து வந்த அதிகாரிகள் ….
திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்தியநாதன் மாற்றம் செய்யப்பட்டு பத்து நாட்களே ஆனா நிலையில் அவ்விடத்திற்கு வே.சரவணன் திருச்சி மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் மாநகராட்சி பணிகளை கண்காணித்து வரும் அவர், இன்று காலை திருச்சி அரியமங்கலம் மண்டலம் 3க்கு உட்பட்ட மலையப்ப நகரில் அமைந்துள்ள பிறப்பு இறப்பு பதிவு செய்யும் அலுவலகத்திற்கு திடீரென பார்வையிட வந்தார். அங்கு வந்த அவர் கோப்புகளை ஆய்வு செய்து செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆணையரின் இந்த அதிரடி விசிட்டை அறியாத அதிகாரிகள் பதறி அடித்து துடித்து அலுவலகத்திற்கு வந்தனர். இதனால் இன்று காலை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
வந்த புதுசுல இப்படித்தான்யா ஏதாவது தங்கள் இருப்பை காண்பிக்க செய்து கொண்டு இருப்பார்கள் பின்னாடி சரியாகிவிடுவார்கள் நாம பார்க்காத ஆணையர்களா என முணுமுணுத்தபடியே அங்கிருந்து பறந்தனர்.