மீண்டும் மூணாறில் முகாமிட்ட படையப்பா யானை !பரபரப்பு…
தமிழகத்தில் இருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரியை காட்டு யானை நிறுத்தியது. காலை 8:30 மணிக்கு நயமக்காடு எஸ்டேட் சாலையில் படையப்பா யானை வந்துள்ளது. படையப்பாவால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
யானை லாரியை சேதப்படுத்தவோ அல்லது டிரைவரை தாக்கவோ இல்லை. ஆனால், லாரியை எடுத்துச் செல்லும் டிரைவர் முயற்சியை யானை தடுத்து நிறுத்தியது. இதையடுத்து ஜீப்பில் வந்த தொழிலாளர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டினர்.
யானை இன்னும் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது.சில மாதங்கள் இடைவேளைக்குப்பிறகு மீண்டும் படையப்பா மக்கள் வசிக்கும் பகுதிக்குள் இறங்கியுள்ளது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.