பழனி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா !!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா விமர்சையாக நடைபெற்றுவருகிறது. மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துவந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மாசி திருவிழாவின் முக்கிய நிழ்ச்சியான தேரோட்டம் நிகழ்ச்சி நான்கு ரத வீதிகளில் நடைபெற்றது, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய மாரியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாரியம்மன் கோயில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு நான்கு ரத வீதிகளில் திருதேர் ஊர்வலம் நடைபெற்றது.
தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவிற்க்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோயில் தேவஸ்தான நிர்வாகம் மேற்க்கொண்டது. பக்தர்கள் கூட்டம்அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர். மேலும் கோவில் நிர்வாகிகள் ,உள்ளூர் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.