அருண் நேருவை பலம் வாய்ந்தவாராக பார்க்கவில்லை பாரிவேந்தர் பட பட…
திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது… பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன் என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பு எனக்கு உண்டு.எம்.பிக்கு ஆண்டுக்கு 5 கோடியை மத்திய அரசு தருகிறது
மேல் நிலை தொட்டி,சாலைகள், மயான சாலை மற்ற முக்கிய திட்டங்களுக்கு இந்த நிதியை பயன்படுத்துவோம், மைய அரசு கொரோனோ காலத்தில் நிதி வழங்கவில்லை – எனக்கு கொடுத்தது 17.5 கோடி தான். முழுமையாக நான் அதனை செலவு செய்து திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன்.
சொந்த பணம் 118 கோடியில் 1200 மாணவர்களுக்கு இலவச கல்வி – தங்கும் இடம் கொடுத்து பட்டதாரிகளாக மாற்றி உள்ளோம், கொரோனோ காலக்கட்டத்தில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை வாயிலாக எண்ணற்ற மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து உதவி உள்ளோம்.சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் 3 மேம்பாலங்கள் பூர்த்தி செய்துள்ளோம்.
தோழமை கட்சியின் உதவியோடு சென்று இருந்தால் கண்டிப்பாக எனக்கு உதவி கிடைத்து இருக்காது – என் தனிப்பட்ட நட்பின் வாயிலாக தான் இதனை நான் செய்துள்ளேன். அரியலூர் – பெரம்பலூர் – நாமக்கல் இணைப்பு ரயில்வே திட்டம் காமராஜர் காலத்தில் இருந்தே கிடப்பில் உள்ளது இதனால் வேலை வாய்ப்பு,தொழிற்சாலை,பொருளாதார வளர்ச்சி இல்லாமல் உள்ளது. இது குறித்து பிரதமர்,ரயில்வே அமைச்சர் அனைவரும் சந்தித்து வழியுறுத்தினேன் – தற்போது ரீ சர்வே நடத்த உள்ளார்கள்.
ஆளும் கட்சி என்றாலே அது நாடக கம்பெனி என்றவர் கே.என் நேருவின் மகன் அருண் நேரு களம் கான வாய்ப்பு என்கிற கேள்விக்கு ? நான் அவரை பலம் வாய்ந்தவாராக பார்க்கவில்லை – அருண் நேருவிற்கு என்ன அடையாளம் உண்டு .திராவிட கட்சிகள் ஆரம்ப காலத்தில் நீதி கட்சியின் வாயிலாக தோன்றியது அப்பொழுது இருந்த கொள்கைகள் வேறு ஆனால் இப்போது கை மாறியதில் எல்லாம் மாறி விட்டது. பதவி வெறி வந்ததால் இங்குள்ளவர்களுக்கு இலக்கு போய்விட்டது.
ஊழல் பற்றி பேச வேண்டும் என்றால் அதற்கு விதை போட்டவர்கள் – வளர்த்துவிட்டர்கள் எல்லாம் இங்கு உள்ளவர்கள் தான். நான் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட உள்ளேன். 2 மாதம் ஒரு கட்சியில் தெரியாமல் போய் சேர்ந்து இருந்தேன் அதை நினைத்து கவலைப்படுகிறேன் என தெரிவித்தார்.
திமுக தலைமை யாரை கை காட்டுகிறதோ அவரை வெற்றிபெற வைக்கக்கூடிய சக்தி நேருவிற்கு உண்டு தன் மகனை விட்டு விடுவாரா என கூறிக்கொண்டே பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்டமன்ற தொகுதியில் பணியாற்றும் காட்சி மற்றும் அச்சு ஊடக செய்தியாளர்கள் அனைவரையும் அழைத்து, ’கவர்’ செய்த பாரிவேந்தருக்கு நன்றி எனக்கூறிவிட்டு கலைந்து சென்றார் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர்.