பாரிவேந்தருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு…
தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களும், ஐ.ஜே.கே தொண்டர்களும், பாரிவேந்தருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய பாரிவேந்தர்,…
ஒரு கல்வியாளர் என்ற முறையில் நாடாளுமன்ற தொகுதி நிதியில் தாம் பள்ளிகளுக்கு அதிக செலவு செய்துள்ளதாகவும், 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி ஆயிரத்து 200 மாணவர்களை தேர்ந்தெடுத்து, பட்டதாரிகளாக உருவாக்கி இருப்பதாகவும் கூறினார். பிரதமர் மோடி பதவிக்கு வந்த பிறகு இந்தியாவை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், திமுக எம்பிகள் மோடியை திட்டுவது, பாராளுமன்றத்தை முடக்குவது போன்ற வேலைகளை செய்து தங்களை ஹீரோக்களாக காட்டி கொள்வதாக குற்றம் சாட்டினார்.
மீண்டும் எனக்கு வாக்களித்தால் நான் என்னென்ன செய்யப்போகிறேன் என்பதை உங்களுக்கு வாக்குறுதிகளாக அச்சடித்தே கொடுத்திருக்கிறேன் ஆனால் ஆளும் திமுகவோ ஆண்ட அதிமுகவின் ஊழலையும் அதிமுகவோ அவர்கள் செய்த ஊழலையும் இருவரும் மாறிமாறி கொள்ளையடித்ததையும் இவர் சிறைக்கு செல்வார் அவர் சிறைக்கு செல்வார் என சாதனைகளை சொல்லாமல் சிறைக்கு செல்பவர்களின் பட்டியலை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஆகவே ஆசிரியராக நாடாளுமன்ற உறுப்பினராக இங்கே வந்து வாக்கு கேட்கிறேன் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டிய சின்னம் தாமரை தாமரை தாமரை என்பதை மட்டும் மறவாதீர்கள் என்று நன்றி கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.