பாரீர்… பாரீர்… பாரிவேந்தர் அவர்களின் பணிகளைப்பாரீர் !

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வாழ் வாக்காள பெருமக்களே ! பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் டா க்டர்.T.R.பாரிவேந்தர், அவர்களுக்கு “தாமரை சின்னத்தில்” வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறோம். ஏன் வாக்களிக்க வேண்டும் அதுதானே உங்கள் கேள்வி ?

இதோ அதற்கான விடைகளில் சில Dr.T.R.பாரிவேந்தரின் பணிகளில் சிலவற்றை பட்டியலிட்டுக்கிறோம் இந்த பட்டியல் இன்றோடு நிறைவடையப்போவதில்லை உங்களுக்காக உடலில் உயிருள்ளவரை தொடரும்…

 


* 1200 மாணவர்களுக்கு தனது சொந்த நிதியில் ரூபாய் 118,77,51,400 (கோடி) ரூபாயில் உயர்கல்வி வழங்கி ஏழை எளிய மக்களின் வாழ்விற்கு விளக்கேற்றியவர்.
* மணப்பாறை – குளித்தலை மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான குளித்தலை இரயில்வே மேம்பாலத்தினை 34 கோடி ரூபாயில் பெற்று தந்து மனம் குளிரவைத்தவர்.
* பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி மக்களின் 50 ஆண்டுகால கனவு திட்டமான அரியலூர் – பெரம்பலூர். துறையூர்-நாமக்கல் (118 கிலோ மீட்டர்) தூரத்திற்கான இரயில்வே திட்டம் கொண்டு வர பெரும் முயற்சி செய்து வருபவர்.

logo right

* கொரோனா பேரிடர் காலத்தில் சொந்த நிதி 2,22,80,00 மதிப்பில் மருத்துவ உபகரணம், ஆம்புலன்ஸ், மற்றும் படுக்கைகள் வழங்கியவர்.
* திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பெருங்காவூர், வடுகர்பேட்டை, கூத்தூர், கல்லக்குடி மாடகுடி மற்றும் கல்லகம் பகுதிகளில் கீழ்மட்ட பாலம் மற்றும் சர்வீஸ் சாலை அமைக்க வழிவகை செய்த வல்லல் பெருமான்.
* திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர்-பாடாலூர், இரூர் மற்றும் நாரணமங்கலம் பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக மக்கள் கூறியதை அடுத்து உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வழிவகை செய்தவர்.

* பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு உணவு பொருட்களை வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் இறுமாப்பு இல்லாமல் சொந்த நிதியில் வழங்கியவர்.
* பள்ளி கூடங்கள் மற்றும் கிராமப்புற குடிநீர் தேவைக்காக சொந்த நிதியில் 1.09,00,000 (கோடியை) வழங்கியவர்.
* எனக்கு எம்மதமும் சம்மதம் எனக்கருதி ஆலய மற்றும் அறப்பணிகளுக்காக ஏறக்குறைய 5 கோடி ரூபாயை அள்ளி அள்ளிக்கொடுத்தவர்.
* காவிரி-வைகை, குண்டாறு இணைப்பு திட்டங்களை விரைவாக தொடங்க மத்திய அமைச்சரிடம் பலமுறை வலியுறுத்தியவர் இந்த முறை எப்படியும் நிறைவேற்றிவிடுவார்.
* முசிறி பகுதி விவசாய மக்களின் பல ஆண்டு கோரிக்கையான கொரம்பு அமைப்பதற்கு நேரில் ஆய்வு செய்து தீர்வு காண வழிவகை செய்தவர்.
* கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த சிறுவாச்சூர் மேம்பால பணியை நிறைவு செய்து 50 ஆயிரம் மக்களின் உள்ளூர் மக்களின் கோரிக்கையையும் பக்தர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றியவர். * 2020ம் ஆண்டு ஏற்பட்ட குடிநீர் வறட்சியின் போது தனது சொந்த நிதியில் தண்ணீர் கொடுத்து மக்களின் தாகத்தை தணித்து தீர்த்தவர்.

* ஏழை விவசாய மக்களின் வியாபார போக்குவரத்திற்காக குருவாயூர் – மங்களூர் விரைவு இரயில்களை லால்குடி மற்றும் குளித்தலையில் நின்று செல்ல வலியுறுத்துபவர்.
ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்வதற்கு இந்த பக்கம் போதாது மத்தியில் ஆளும் கட்சியுடன் சேர்ந்து இருந்தால்தான் இனும் இன்னும் பல்வேறு திட்டங்களை தீர்க்க முடியும் என எண்ணி இம்முறை டாக்டர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
மறவாதீர் உங்கள் சின்னம் தாமரை உங்கள் வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பட்டியலில் கண்டது சில வரும் நாட்களில் மீண்டும் தொடரும் டாக்டர் அய்யாவின் பணி உங்களின் பேராதரவோடு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் தாமரை தாமரை தாமரை எங்கோ ஒரு ஊரில் ஒலித்துக்கொண்டிருந்தது ஸ்பீக்கரில் !.

Comments are closed, but trackbacks and pingbacks are open.