சசிகலாவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு ! நோ வாய்ஸ் !!
சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதாவீட்டுக்கு எதிரே ‘ஜெயலலிதா இல்லம்’ என்ற பெயரில் சசிகலா புதிதாக வீடு கட்டியுள்ளார். அதன் கிரகப்பிரவேசம் சில நாட்களுக்கு முன் நடந்தது. அன்றைய தினம் கிரகப்பிரவேசத்தில் பங்கேற்க முடியாததால், நடிகர் ரஜினிகாந்த் நேற்று சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பிறகு, வெளியே வந்த ரஜினிகாந்த், நிருபர்களிடம் கூறுகையில், வீடு, கோயில் மாதிரி இருக்கிறது. இந்த வீடு அம்மா (சசிகலா)வுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதியை கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்’ என்றார். பேட்டி யின்போது,’இன்று (நேற்று) ஜெயலலிதா பிறந்த நாள். அந்த ஆளுமை இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு, ‘அரசியல் குறித்து பேச விரும்பவில்லை’ என்றார்.
அதேபோல, அவர் பர்சனலா சந்திக்க வந்திருக்கிறார் என்று சசிகலாவும் பதிலளித்தார். இந்த சந்திப்பின் பொழுது திருமதி லதா ரஜினிகாந்தும் அவருடன் சென்றார், நேற்றைய நிருபர் சந்திப்பில்தான் வாய்ஸ் கொடுக்கவில்லை நாடாளுமன்ற தேர்தலில் வாய்ஸ் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.