ரமலான் பண்டிகை கோலகல கொண்டாட்டம்…

இஸ்லாமியர்களின் திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் ரமலான் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம் இந்நிலையில், திருச்சியில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகை. 110 இடங்களில் வழிபாடு, திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

logo right

இதில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் ரமலான் கொண்டாட்டத்தில் சிறப்பு தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியை அன்பை பரிமாறிக் கொண்டனர்.
ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இஸ்லாமியர்களின் முக்கிய விழாவான ராம்ஜான் பெருவிழா மாநகரில் பள்ளிவாசல்களிலும், திறந்த வெளி மைதானங்களிலும் மற்றும் ஒரு உள்ளரங்கத்திலும் 110 இடங்களில் கூட்டு தொழுகை நடைபெற்றது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.