விட்டாச்சு லீவு கொடைக்கானலை நோக்கி ஓடு !
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாக திகழ்கிறது, பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது ஏனெனில் ஏழைகளின் இளவரசி.
தற்போது புனித வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற தொடர் மற்றும் வார விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படயெடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் கொடைக்கானல் முகப்பு பகுதியான பெருமாள்மலையிலிருந்து – வெள்ளி நீர்வீழ்ச்சி வரை நெடுஞ்சாலை துறையினரால் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது விடுமுறைக்காக கொடைக்கானலுக்கு படை எடுக்க துவங்கி உள்ள சுற்றுலா பயணிகள் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கக்கூடிய காட்சிகளை பார்க்க முடிகிறது.
மேலும் பணிகள் துரிதப்படுத்தாததால் சுற்றுலா பயணிகள் காத்திருக்கக் கூடிய அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது.தொடர்ந்து வாகனங்கள் வருகையால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்கி நடந்து வரக்கூடிய நிலையும் ஏற்பட்டு இருப்பதாக சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர் விடுமுறை இருப்பதால் இன்னும் இரண்டு நாட்கள் சுற்றுலா பயணிகளின் கூட்டம் கொடைக்கானலில் இருக்கும் என்று தெரிகிறது.
இதனால் நெடுஞ்சாலை துறையினரால் மேற்கொள்ளக்கூடிய பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது தொடர்ந்து கோடை விடுமுறையும் துவங்க உள்ளதால் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.