தமிழக சிறப்பு உதவி ஆய்வாளர் வங்கதேச எல்லையில் கைது…
பங்களாதேஷ் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற தமிழக காவல்துறையின் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை வங்கதேச ராணுவம் கைது செய்தது
திருச்சியை சேர்ந்த ஜான் செல்வராஜ், சென்னை மடிப்பாக்கத்தில் தங்கி சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு மருத்துவ விடுப்பில் சென்றவர் தற்போது பங்களாதேஷ் இராணுவத்தினரிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்நிலையத்தில் குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் சட்டவிரோத கும்பலுடன் தொடர்புடையவரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.