உடல்தானம் செய்தவருக்கு அரசு மரியாதை !
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கீக்களூர் கிராமத்தில் வசித்து வரும் கண்ணையன் என்பவர் கடந்த 21ம் தேதி காலை மொட்ட மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் இருந்து சிந்திய தண்ணீரால் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமுற்ற கண்ணையன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.
அங்க முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கண்ணையனின் உயிர் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து கண்ணையின் மகனான குமார் என்பவர் தனது தந்தையாரின் உடலில் இருக்கும் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து தானம் செய்துள்ளார்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்ணையனின் உடலில் இருந்து கண்களை மட்டும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தானமாக பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை உடன் நன்னடக்கம் செய்யப்படும் என்பதை அறிவித்ததை தொடர்ந்து, நேற்று மாலை கண்ணையனின் உடல் அரசு மரியாதையுடன் நல்ல அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கண்ணையனின் உடலுக்கு தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் அஞ்சலி செலுத்தினர்.
இறந்தபின் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களும் விழிப்புணர்வு ஏற்பட்டு உடல் உறுப்பு தானங்களை செய்ய முன்வந்திருப்பது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. கண்ணையனின் உடல் மண்ணுக்கு சேர்ந்தாலும் அவரது கண்கள் இம்மண்ணில் இன்னும் உயிர் வாழும் என்பது அவரது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.