பஞ்சபூதஸ்தல்ங்களில் முக்க்கிய மான ஸ்தலமாகவும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் கருதப்படும் ஜெம்புகேஸ்வர் அகிலாண்டிடேஸ்வரி திருக்கோவிலுக்கு அம்பாளுக்கு ஒரு தேர் ஸ்வாமிக்கு ஒரு தேர் என இரு தேர்கள் உள்ளன. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன தேர்திருவிழா அதிகாலையன்று திருவானைக்காவல் தேர் அருகே படுத்திருந்த முதியவர் மரணம் அடையவே பரிகார பூஜைகள் செய்யப்பட்டு தேரை இழுக்க ஆரம்பித்தனர் பக்தர்கள்.
தேருக்குப் பின்னால் கட்டை போடுபவர்களின் டி-ஷர்ட்டில் எழுந்த பிரச்சனை மற்றும் கடும் வெயில் காரணமாக, திருச்சி திருவானைக்காவல் பங்குனி திருத்தேர், 14 மணி நேரம் கடந்து நிலையை அடைந்தது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று பங்குனி தேரோட்ட விழா நடைபெற்றது.
முதல் தேரில், ஜம்புகேஸ்வரர்- அம்பாள் தம்பதி சமேதராகவும், இரண்டாவது தேரில் அகிலாண்டேஸ்வரி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கிடையே, முதல்நாள் இரவு, சிவன் தேருக்கு அருகில் படுத்திருந்த அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்து விட்டார். பரிகார பூஜைகள் முடிந்து, தேர்கள் தூய்மைப்படுத்தப்பட்டன. அதன்பின், முதல் தேரானது காலை, 6:45 மணிக்கு வடம் பிடித்து இழுக்கபட்டது.
தேருக்கு பின்னால் கட்டை போடுபவர்கள் மஞ்சள் நிறத்தில் தங்களது சமூகம் சார்ந்த டி-ஷர்ட்டுகளை அணிந்திருந்தார்கள். ஜாதி சார்ந்த பிரச்னை ஏற்படும் என்ற காரணத்தினால், ஸ்ரீரங்கம் காவல்துறை உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ‘மஞ்சள் டி-ஷர்ட்டுகளை கழற்றினால் மட்டுமே கட்டை போட அனுமதிப்போம்’ என்று கூறினார். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தேர் இழுப்பதில் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், அவர்கள் அனைவரும் டி-ஷர்ட்டுகளை கழற்றிய பிறகு தேர் வடம் பிடிக்கப்பட்டது.
ஆனால், சிறிது தூரத்திலேயே மீண்டும் இதே பிரச்சனை காரணமாக மீண்டும் தேர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், தேர் வடக்கு வீதி- மேற்கு வீதி சந்திப்பில், ஒரு தரப்பினர் கட்டைகளை மாற்றிக் கொண்டனர். இதனால் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, கடைவீதி முறையில் கட்டை போடுபவர்கள் ‘இன்று அமாவாசை; மதியம் விரதம் விடவேண்டும்’ என்று மதியம் ஒன்றரை மணிக்கு கிளம்பி விட்டனர்.அதைபார்த்து, கட்டையை மாற்றிய தரப்பும், ‘மதிய உணவுக்கு செல்கிறோம்’ என்று கிளம்பிவிட்டனர். அதன்பின், 4 மணிக்கு தான் இருதரப்பினரும் வந்தனர். இப்படியே தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவும், கடுமையான வெயிலின் காரணமாகவும், பக்தர்களால் தேரை இழுக்க முடியவில்லை. பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததன் காரணமாக, டிராக்டரின் உதவியுடன் தேரை இழுக்கத் தொடங்கினர்.
இப்படி தொடர்ந்து தாமதமானதன் காரணமாக, மதியம், 12 மணியில் இருந்து, 2 மணிக்குள் நிலையில் நிற்க வேண்டிய தேர், இரவு 8 மணிக்கு நிலையை அடைந்தது. இதனால், பக்தர்கள் மிகுந்த மன வருத்தமும், விரக்தியும் அடைந்தனர். வழக்கமாக, தேரோட்டத்தின் போது மதிய இடைவேளை என்று ஒன்று கிடையாது. தேர் புறப்பட்டு, மீண்டும் நிலையை அடையும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவர்.
தேர் நிலைக்கு வந்த பிறகு அனைவருக்கும் திருக்கோயிலின் சார்பில் சமபந்தி போஜனம் வழங்கப்படும். அதையே பிரசாதம் போல், முறைக்காரர்களும், பக்தர்களும் மதிய உணவாக சாப்பிடுவர். ஆனால், இன்றைய தேர் திருவிழாவில் ‘தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரர்’ என்ற போக்கில் முறைக்காரர்கள் நடந்து கொண்டதாலும், கோயில் நிர்வாகம் இவர்களை முறையாக ஒருங்கிணைப்பு செய்யாததே, 10 மணி நேர தாமதத்திற்கு காரணம் என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவானைக்காவல் தேரோட்டத்தை ஒட்டி தேரோடும் நான்கு வீதிகளிலும் மின்சாரம் காலை, 6 மணி முதல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மீண்டும் தேர் நிலைக்கு வருவதற்கு முன்பு, 7 மணிக்குதான் மின்சாரம் வழங்கப்பட்டது. சுட்டெரிக்கும் கடுமையான வெயில் காரணமாக வீட்டுக்குள் இருந்தவர்கள், மின் நிறுத்தத்தால் புழுக்கத்தில் புழுங்கி தவித்தனர்.
#விதுரன் செய்திகளை உடனடியாக வாட்ஸாப் மூலம் அறிய Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KLk5FJo4GW12jznRd5ndVs
Comments are closed, but trackbacks and pingbacks are open.