ஜோதி மணியை ஓடவிட்ட கிராம மக்கள்…

வேடசந்தூர் அருகே முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளருமான டாக்டர் வி பி பி பரமசிவத்தை தரக்குறைவாக பேசியதாக கூறி பொதுமக்கள் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணியின் காரை வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

 


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று காலை முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மாலை வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளம்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது வாக்காளர்கள் இடையே பேசிய அவர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் இளம்பெண் பாசறை மாநில செயலாளருமான டாக்டர் வி பி பி பரமசிவத்தை தரை குறைவாக பேசியதாக கூறி ஊர் பொதுமக்கள் திடீரென வேடசந்தூர் அடுத்துள்ள கோவிலூர் ராமநாதபுரம் என்னும் இடத்தில் ஜோதி மணியின் காரை சிறை பிடித்தனர், பின்னர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அவரின் காரை நகர விடாமல் சிறை பிடித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

logo right

பின்னர் ஜோதி மணியுடன் வந்த தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த வாக்குவாதமானது சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜனின் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் ஜோதி மணியின் காரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணியின் காரை வழிமறித்து பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.