திண்டுக்கலை திகைக்க வைக்கும் திலகபாமா !

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா தினமும் ஏதாவது ஒரு செயலைச்செய்து மக்கள் மத்தியில் இடம்பிடித்து வருகிறார் நேற்று நெசவு நெய்து வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி சார்பில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். இவரது தேர்தல் பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

logo right

குறிப்பாக இவர் ஆதரவு திரட்ட செல்லும் பகுதிகளில் வடை, போண்டா சுட்டு தருவது, கரும்பு ஜூஸ் விற்பனை, பஞ்சாமிர்த விற்பனை, வயல்வெளிகளில் களை எடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு இடையே இன்று காலை திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சௌராஷ்டிராபுரம் பகுதியில் வாக்குகள் சேகரித்தார். நெசவாளர்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் நெசவாளர் ஒருவர் வீட்டிற்கு சென்ற திலகபாமா, அவர்களின் குறைகளைக்கேட்டு தறி நெய்து ஆதரவு திரட்டினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.