திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் நடைபெற்ற புனித வெள்ளி நிகழ்ச்சியில், இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய, சிலுவையை சுமந்தபடி அழைத்துச் செல்வதையும் அவரை யூதர்கள் ரத்தம் அடித்து துன்புறுத்துவதை செய்வதையும் தத்ரூபமாக சித்தரித்தபடி, ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரம் கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவை ஏந்தி நெடுங்குணம் மாதா மலைக்கு தவப்பயணம் மேற்கொண்டனர்.
![logo right](https://vithuran.com/wp-content/uploads/2024/03/ad-left.gif)
பங்குத்தந்தை தலைமையில் பக்தி மாலை பாடியபடி சேத்துப்பட்டு – வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்குணம் மாதா மலைக்கு தவப்பயணம் மேற்கொண்டனர். இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததை நினைவு கூறும் வகையில் 14 நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் பங்குத்தந்தையர்கள் அருட்கன்னியர்கள் இளைஞர்கள் இளம் பெண்கள் சிலுவையை சுமந்து சென்றனர்.
தொடர்ந்து நெடுங்குணம் மாதா மலையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இந்நிலையில் சேத்துப்பட்டு லூர்து நகர், நிர்மலா நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரம் கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.