சீமானை சீண்டிய திருநாவுக் ‘அரசர்’ கோபத்துடன் பேட்டி…

0

தமிழகம் முழுவதும் தமிழகத்தையும் தமிழக மீனவர்களையும் வஞ்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அதன்பின் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபொழுது சீறினார்.

பிரதமர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சி செய்ததை குறித்து பேசிய கேள்விக்கு ஓட்டுக்காக பிரதமர் பேசுகிறார். அதிமுகவுடன் கூட்டணி இல்லாததால் அந்த ஓட்டுகளை பிரிப்பதற்காக உள்நோக்கத்துடன் பேசியுள்ளார் என பதில் அளித்தார்.

logo right

பாரதிய ஜனதா கட்சிக்கு நீங்கள் செல்வதாக தகவல் வெளியாகிறது அதை சொல்கிறவனை செருப்பால் அடிப்பேன் நான் இனி சீமான் போல் தான் பேசுவேன். நான் 50 வருட அரசியல்வாதி யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கான தரம் வேண்டும் என்றவர் இந்த கேள்வியை முதல்வர் ஸ்டாலினிடம் உங்களால் கேட்க முடியுமா உடன் உள்ளவர்கள் உங்களை அடி மொத்தி விடுவார்கள் என்றார்.

சில youtube சேனல்கள் பிழைப்பதற்காக நான் பேட்டி கொடுக்கிறேன். மற்றவர்கள் யாரும் இது போல் பேட்டி கொடுக்க மாட்டார்கள் அவர்கள் இதை நம்பி இருக்கிறார்கள். அதனால் பேட்டி கொடுக்கிறேன் ஆனால் அவர்கள் இஷ்டத்திற்கு ஒளிபரப்புகிறார்கள். நீங்கள் நினைத்தாலும் என்னை அனுப்ப முடியாது நான் தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நிருபர் ஒரு ஸ்டாலின் இவரை மாதிரி அதிமுக தனிக்கட்டி பிஜேபி காங்கிரஸ் என கட்சி மாறியிருந்தால் கேட்கலாம் என முணகியபடியே சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.