தேர்தல் உரிமையைப் பயன்படுத்த, வாக்காளர் அடையாள அட்டை இல்லையா மாற்று வழிககளைப் பயன்படுத்தலாம்…
வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) என்றும் அழைக்கப்படுகிறது, இது தகுதியான அனைத்து வாக்காளர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையாகும். வாக்களிப்பதற்கான தகுதி மற்றும் பதிவுக்குப் பிறகு, வாக்காளர் பட்டியலில் தனிநபரின் சேர்க்கையை உறுதிப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வாக்காளர் சீட்டை வெளியிடுகிறது.
இந்தச் சீட்டு, குறிப்பிட்ட புகைப்பட அடையாளச் சான்றுடன், அதிகாரப்பூர்வ வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வாக்காளர் அட்டையாகப் பயன்படும். மேலும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்காக சமர்ப்பிக்கலாம்.
இருப்பினும், புகைப்பட வாக்காளர் சீட்டு வாக்களிப்பதற்கான முழுமையான அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய மாற்று ஆவணங்களின் பட்டியல் இதோ உங்களுக்காக…
பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய/மாநில ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படங்களுடன் கூடிய சேவை அடையாள அட்டைகள், அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள், வங்கி/அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள், பான் கார்டு, NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு, MNREGA வேலை அட்டை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம்). தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், எம்.பி.க்கள்/எம்எல்ஏக்கள்/எம்எல்சிகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள், ஆதார் அட்டை, டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டை இவற்றை சமர்ப்பித்தும் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம்.