நடுத்தர வர்க்கத்தினருக்கான டாப்-7 முதலீட்டு ஐடியாக்கள்…
எல்லோருக்குமே தாங்கள் தங்கள் வாழ்கையில் பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து மேலும் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்பது விருப்பம் ஆனால் அதில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த சிறந்த 7 விருப்பங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்…
1.தங்கம் : பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்கம் முதலீட்டுக்கான புகலிடமாக கருதப்படுகிறது. நீங்கள் விரும்பினால், தங்க ப.ப.வ.நிதிகள் அல்லது இறையாண்மை தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
2.வீட்டு மனைகள் : சொத்தில் முதலீடு செய்வது இரட்டிப்பு பலன்களை வழங்குகிறது முதலில் மூலதன உருவாக்கம் மற்றும் இரண்டாவது வாடகை வருமானம் ஆகியவற்றை பெருக்க வழிகிடைக்கிறது அதனால்தான் நம் முன்னோர்கள் மண்ணிலும் பொன்னிலும் முதலீடு செய்யச்சொல்லியிருக்கிறார்கள்.
3. தேசிய ஓய்வூதிய அமைப்பு : NPS என்பது அரசாங்க ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும், இது வரி சலுகைகளையும் வழங்குகிறது ஓய்வு காலத்தில் நமக்கு பெரிதும் கைகொடுக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.
4. பொது வருங்கால வைப்பு நிதி : பொது வருங்கால வைப்பு நிதி என்பது பிரபலமான நீண்ட கால அரசாங்க முதலீட்டு திட்டமாகும். ஓய்வூதிய நிதி வசூலிப்பதற்கான இந்தத் திட்டம் வரி இல்லாதது வேலையில் இருக்கும் காலங்களில் சிறுக சிறுக சேமித்து வந்தால் ஓய்வு காலத்தில் நல்ல பலனை அனுபவிக்கலாம்.
5. நிலையான வைப்பு மற்றும் பத்திரங்கள் : இது FD அல்லது அரசு மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களைப் பற்றியது என்றாலும், நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலையான வருமானத்தைப் பெறலாம். FDல் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, அதேசமயம் பத்திரங்களில் நீங்கள் சிறிய அபாயத்துடன் அதிக வருமானத்தைப் பெறுவீர்கள் என்பதுதான் நிச்சயம்.
6. பங்கு சந்தை : பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் சில காலக்கட்டத்தில் பெரிய லாபம் கிடைக்கும். ஆனால் ஆராய்ச்சி மற்றும் நிபுணர் ஆலோசனையுடன், நல்ல வருமானம் தரக்கூடிய பங்குகளைக் கண்டறிந்து முதலீடு செய்ய வேண்டும் இல்லையேல் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
7. பரஸ்பர நிதி : மியூச்சுவல் ஃபண்டுகள் தனிப்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து பங்குகள், பத்திரங்கள் மற்றும் பிற சொத்துக்களில் முதலீடு செய்கின்றன. ஆரம்ப மற்றும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த வழி ஏனென்றால் இவற்றை நிர்வகிப்பவர்கள் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள் அகவே நாம் அதனை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வானவில்லைபோல கலர்புல்லான ஏழு அம்சங்களை கடைப்பிடியுங்கள் உங்கள் முதல் என்றும் மோசமாகாது.