டிராக்டர் கார் மோதல் நால்வர் சம்பவ இடத்திலேயே பலி…
திருமணத்திற்காக ஆந்திரா பதிவேன் கொண்ட காரில் வந்த நான்கு பேர் முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழப்பு.
கீழ்பெண்ணாத்தூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் விசாரணை. திருவண்ணாமலையிலிருந்து ஆந்திரா பதிவு கொண்ட வாகனம் கீழ்பெண்ணாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதிய விபத்தில் காரில் வந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
டிராக்டர் ஓட்டி வந்த வள்ளிவாகையை சேர்ந்த டிரைவர் பூங்காவனம் என்பவருக்கு கையில் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அனுப்பி வைக்கப்பட்டார்.
கீழ்பெண்ணாத்தூர் அருகில் கல்லாடிகுளம் பகுதியில் திருமணத்திற்கு வந்ததாகவும் வரும்போது விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் காரில் வந்த விழுப்புரம் கஸ்கார்னி பகுதியைச் சேர்ந்த அழகன் அவலூர்பேட்டையைச் சேர்ந்த பாண்டியன் காரில் வந்த முகவரி தெரியாத பிரகாஷ் மற்றும் சிரஞ்சீவி ஆகிய நான்கு பேரும் காரில் வந்ததாகவும் காரில் வந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த நான்கு பேரின் உடலையும் கீழ்பெண்ணாத்தூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் விசாரணை.