திருச்சி : உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட வைகோ…

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு வாக்கு சேகரிக்க ஸ்ரீரங்கத்துக்கு வந்த மதிமுகவின் பொது செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் பேசியது… ஸ்ரீரங்கம் திருத்தலத்தின் நாயகன் பெருமாள் எனப்படும் ஸ்ரீரங்கநாதர், திருத்தலத்தில் துரை வைகோ வாக்கு சேகரிக்க வந்த போது எனக்கு பெருமாளும் வேண்டும், பெரியாரும் வேண்டும் கூறியுள்ளார்.

எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் என் இடத்தை நிரப்பியவர் அவர். நிர்வாகிகள் ஒப்புதலோடு ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தான் துரைவைகோ அரசியலுக்கு வந்தார். காவிரி கொள்ளிடம் ஆறுகள் வறண்டு கிடக்கும் நிலையில் கர்நாடக அரசு மேக தாட்டுவில் அணை கட்டுகிறது. இதற்காத கர்நாடக அரசு 9500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கர்நாடகா அரசு செய்துள்ளது, எந்த மாநிலத்திலும் இல்லாத திராவிட மாடல் ஆட்சியை கொண்டு வந்து இந்திய மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்..

logo right

தமிழ்நாட்டைப் பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும் தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்ட உன க்கு என்ன தெரியும். தமிழ் அறிஞர்கள் தமிழ்நாடு என்று வைத்த பெயரை தமிழகம் என்று மாற்றம் செய்ய நீ யார் ? இதனை யார் வந்தாலும் மாற்ற முடியாது என கூறினார் அதில் ஆயிரம் அர்த்தம் உள்ளது. அரசாங்கம் தயாரித்து தரும் உரையை கவர்னர் பேசித்தான் ஆகவேண்டும் ஆனால் தமிழக ஆளுநர் ரவி தனது உரையில் அண்ணா, பெரியார் பெயர்களை உச்சரிக்கவில்லை. இது ஆளுநரின் அதிகார எல்லையை கடந்த வேலை. அவர் வெளியே சென்ற பிறகு மீண்டும் அதே வாசிக்க செய்து புரட்சி செய்தார் தமிழக முதல்வர் அனைத்து தரப்பினருக்கும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தியவர் ஸ்டாலின்.
ஸ்டாலின் இன்னும் பல நல்ல திட்டங்களை தீட்டி தமிழகம் அனைத்து மாநிலத்திற்கும் வழிகாட்டியாக விளங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுவதில்லை இப்படி ஊர் ஊரா சென்று தான் பேசிக் கொண்டிருக்கிறார் . அப்படியே பேசினாலும் கவர்னரை போல உளறத்தான் செய்வார். ஒரு பிரதம அமைச்சராக இருந்து கொண்டு ஒரு கட்சியை அழித்து விடுவேன் என்று பேசுவதா அவ்வளவு திமிர் ஆணவம் அகம்பாவம் கொண்டிருக்கிற தலைமை அமைச்சரை தூக்கி எறிகிற தேர்தலாக உள்ளது.

அகல் விளக்கு ஏற்ற தீப்பெட்டி பயன்படுகிறது. புகைப்பிடிப்பதற்கும் தீப்பெட்டி தேவைப்படுகிறது. ஆனாலும் புகை பிடிக்கும் பழக்கம் தற்போது குறைந்துள்ளது. என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய வைகோ… தனது மகனும் வேட்பாளருமான துரைவை கோவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறினார். அருகில் இருப்பவர்கள் தீப்பெட்டி என்று கூறியவுடன் உடனே சமாளித்து தமிழக முழுவதும் சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என என கூறினார்.
முன்னதாக பேசிய ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். புதிய பேருந்து நிலையத்தை தற்போது தான் கொண்டு வந்துள்ளேன். எந்த ஜாதி மதம் இனம் பாராமல் ஆட்சி செய்பவர் தமிழக முதல்வர் .ஏற்கனவே இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெயலலிதாவை விட 500 கோடிக்கு நலத்திட்டங்களை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.