என் முதுகில் குத்திய ஒரே நபர் வீரமணி ஏ.சி.எஸ் காட்டம் !
வேலூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும்புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுதாக்கல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி ஒரே நபர் தான் என் முதுகில் குத்தினார் அதனால் தான் கடந்த முறை தோல்வியை தழுவினேன் என அதிர வைத்தார்.
வேலூர்மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கூட்டணியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவரும் பாஜக வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சுப்பு லெட்சுமியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அவருடன் பாமக மாவட்ட செயலாளர் இளவழகன் பாமக மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர். ஏ.சி.சண்முகத்திற்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி லலிதா லஷ்மியும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்திய குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை மேலும் கடந்த முறை அதிமுக தொண்டர்கள் அனைவரும் எனக்காக வேலை செய்தனர் ஆனால் என் முதுகில் குத்தியவர் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி மட்டுமே என் முதுகில் குத்தினார் அதனால் தான் நான் தோல்வியை தழுவினேன் ஆதாரங்கள் இருக்கிறது விரைவில் வெளியிடுகிறேன்.
தமிழ்நாட்டில் முதல் கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. இந்திய குடியுரிமைச் சட்டம் என்பது, இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் அல்ல. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை அளிக்கக்கூடிய சட்டமாகத்தான் இந்த சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் ஒருவர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள்.
கடந்த ஓராண்டில் 400க்கும் க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் தீய சக்திகள் வரக்கூடாது என்பதற்காகவே தான் இந்த இந்திய குடியுரிமை சட்டம் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டத்தில் இலங்கை தமிழர்களை சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். வீடு கட்டு திட்டம் மற்றும் கழிப்பிடங்கள் கட்டும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக அளவில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கோதாவரி பாலாறு இணைக்கும் திட்டத்தை நாங்கள் நிறைவேற்ற வலியுறுத்துவோம். பாலாற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுப்போம் இவ்வாறு பேட்டியளிதார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.