காய்கறி ராஜா டூ வாமனா ராஜா ! உழைப்பு சார்…
திருச்சி, ஸ்ரீரங்கம் ஸ்ரீபலஹாரி புருஷோத்தம ராமானுஜ ஜீயர் மடத்தின் 6வது பட்ட ஜீயராக ஸ்ரீபராங்குச் புருசோத்தம ராமானுஜ ஜீயர் உள்ளார் அவர் தன்னை கொலை செய்வ தற்காகவும் இந்த மடத்தின் சொத்துக்களை அபகரிப்பதற்காகவும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு நபரும் அவருடன் சேர்ந்த சிலரும் முயல்வதாகவும், அவர்களின்முயற்சிகளுக்கு துணை போகாததால் அவர்கள் தன் மீது அவதூறு செய்திகளை பரப்பி பொய் சொல்லி பிரச்சாரம் செய்து வருவதாகவும் தனக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியாததை பயன்படுத்தி என்னை மிரட்டி என்னிடம் வெள்ளை பேப்பர்களில் கையெழுத்தை வாங்கி மிரட்டுகின்றனர்.
எனவே தனக்கும், தனது மடத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். இது திருச்சி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
இந்நிலையில் ராஜாவை சந்தித்து நேரில் தொடர்புகொள்ள வேண்டும் என்றோம் இல்லைங்க சற்று வேலையாக இருக்கேன் நீங்க என்னனு போன்லயே சொல்லுங்க என்றார். கொஞ்சம் நேரில் விரிவாக விசாரிக்க வேண்டும் சில தகவல்கள் கேட்க என்றதுடன் வரச்சொன்னர் அவருடைய அலுவலம் சென்றோம், என்ன பிரச்சனை.
சார் இது முழுக்க முழுக்க லோக்கல் பாலிடிக்ஸ் அதைவிட உங்க கூட்டாளிகள் (பத்திரிக்கையாளர்கள் சிலர் பெயரை சொல்கிறார் ) கிளப்பிய பிரச்சனை. என்னோட பூர்வீகம் திண்டுக்கல் அங்கிருந்து சிறு வயதிலேயே ஸ்ரீரங்கம் மளிகைகடைக்கு வேலைக்கு வந்தேன் அங்கே மடத்தின் கோசாலையில் மாட்டுத்தீவன் சப்ளை செய்தேன், தற்செயலாக ஒரு நாள் பெரிய ஜீயர் பார்த்து உணவு கொடுத்தார் என் நிலையைக்கேட்டு அதன்பின் அன்றே பத்தாயிரம் ரூபாய் கொடுத்து காய் கறி வியாபாரம் பண்ணு பிழைச்சுக்கோண்ணு சொன்னார் சிறிது நாட்களில் வருமானம் வரவே அவரிடம் வாங்கி தொகையை கொடுக்க சென்றேன்.
இந்த நேர்மை உன்னை என்னைக்கும் கைவிடாது இதையே முதலாக வச்சுக்கோ எனக்கு எதுவும் வேண்டாம் என்றார். பின்னர் அம்மா மண்டபத்தில் இருக்கும் சைக்கிள் ஸ்டாண்ட் கக்கூஸ் ஏலம் எடுத்தேன் அதில் சம்பாதித்த காசைக்கொண்டு பெரிய அளவில் கட்டுமானம் செய்ய ஆரம்பித்தேன் ரியல் எஸ்டேட் தொழிலைப்பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டுமா அதன்பின் அங்கே நடக்கும் விழாக்களுக்கு நேரடியாக அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன். மடத்திற்கு சமையலுக்கு வந்தவர் பத்ரி சில காலங்களில் மடத்தை பூட்டிவிட்டு இது என்னுடைய வீடு மடம் அல்ல எனக்கூறி சொந்தம் கொண்டாட ஆரம்பித்தார் இது பலருக்கும் தெரிந்த யாதார்த்தானமான உண்மை.
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் செளந்திரராஜன் என்கிற ஆய்வாளர் மூலம் புகார் சொல்ல பத்ரி என்பவரைப்பற்றியான புகாரை அவரது பெற்றோர்களே அளித்தனர் விசாரணை மேற்கொள்ள ராஜாவை காவல்துறையினர் நிலையம் வரச்சொல்ல பத்ரிக்கும் ராஜாவுக்கு வாக்குவாதம் ஆகி பெரிய பிரச்சனையாக அப்பொழுது அன்றைய பத்திரிக்கைகளில் அது பேசப்பட்டது.
அதன்பின் அந்த சொத்தை மீட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைத்தோம் பத்து ஆண்டுகளாக இந்த சொத்துக்களை அறநிலையத்துறை நிர்வாகம் செய்து கொண்டு வருகிறது, இந்த மடத்தில் அதிக அளவில் தப்பான காரியங்கள் நடக்கிறது இனி இந்த மடத்திற்கு நான் வரமாட்டேன் (லெட்சுமி நாராயணஜூயர் ஸ்வாமிகள்) என்று சொல்லிவிட்டு சென்றவர்தான் அதன்பிறகு அவர் இங்கே வரவில்லை ஆட்கொணர்வு மனு போட்டபின் பரமபதம் அடைந்தபின் ஸ்ரீரங்கம் கீழவாசலில்தான் திருவரிசை செய்துள்ளார்கள் அதன்பின் நீதிமன்றம் அந்த சொத்தை அறநிலையத்துறைக்கு அவர்களிடமே ஒப்படைக்க சொல்லியது.
தற்பொழுது வந்திருக்கும் கோவிந்த ராமானுஜ ஸ்வாமிகள் அயோத்தி சென்ற நிலையில் வரும் வழியில் இப்பொழுது இருக்கும் ஜீயரை அழைத்து வந்தார் அதன்பின் ஐந்து பேர் கொண்ட குழுவிடம் அறிநிலையத்துறை ஒப்படைத்தது, தற்பொழுதைய ஜூயர் வருமானத்திற்கு அதிக ஆசைப்பட்டு வேண்டாத புரளிகளை கிளப்பி விட்டுக்கொண்டிருக்கிறார் அதற்கும் மேலாக நான் வைத்திருக்கும் சொத்திற்கும் இந்த மடத்தின் சொத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை இதற்குமேல் நீதிமன்றம் மூலம் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார்.
சிவன் சொத்து குல நாசம் என்பார் அரங்கனை கும்பிட்டால் அள்ளிக்கொடுப்பார் போல !