வேலூர் : சம வேலைக்கு சமஓதியம் வழங்குக !
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பதனை வலியுறுத்தி சென்னை டிபிஐ அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தொடர் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. விளம்பர திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி சமவேலைக்கு சம ஊதியம் 311 என்ற அரசாணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஆசிரியர்களை கைது செய்வதை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் SSTA மாவட்டச் செயலாளர் விஜயன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுனர். அப்போது வேலூரில் சுட்டெரிக்கும் வெப்பத்தை பொறுப்பெடுத்தாமல் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.