திருவண்ணாமலையை விறுவிறுக்க விந்தியா !
திருவண்ணாமலையில் மீண்டும் திமுக வெற்றி பெற்றால் எ.வ. வேலுவின் குடும்பமும், ஸ்டாலின் குடும்பமும் தான் முன்னேற்றம் அடையும் மக்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள் என நடிகை விந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் எம் கலியபெருமாளை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும் நடிகையுமான விந்தியா திருவண்ணாமலை காந்தி சிலை அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் திருவண்ணாமலையில் திமுக எம்பி மீண்டும் வெற்றி பெற்றால் எ.வ. வேலுவின் குடும்பம் முன்னேறும், ஸ்டாலின் குடும்பம் முன்னேருமே தவிர இப்பகுதி மக்களின் பொருளாதாரமும், குடும்பமும் முன்னேறாது என்றும் பஸ் கண்டக்டர் ஆக இருந்த எ.வ வேலு இன்று அமைச்சராகவும் பல ஆயிரம் கோடிகளை முறைகேடாக சேர்த்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.