வைரல் வீடியோ வருத்தெடுத்த வருண்…
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே திருச்சி- நாமக்கல் சாலையில் சென்ற வாகனங்களை மறித்து இரவு நேர ரோந்து வாகனத்தில் இருந்த போலீசார் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என கூறப்படும் வாலிபர் லஞ்சம் வாங்கிய வீடியோ வலைத்தளங்களில் பரவிய நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தொட்டியம் அருகே உள்ள ஏலுர்பட்டி என்ற இடத்தில் இரவு நேர ரோந்து போலீசாரிடம் வாலிபர் ஒருவர் சேர்ந்து கொண்டு வாகனங்களை தேக்கி பணம் வாங்கும் காட்சி வெளியானது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார், தொட்டியம் காட்டுப்புத்தூர் பகுதியில் ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த வடிவேல், செல்வம், ஆகிய இரண்டு எஸ்.எஸ்.ஐ. களையும்,தலைமை காவலர் பாலச்சந்திரன், முதன்மை காவலர் சாந்தமூர்த்தி, காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை, ஆகிய நான்கு காவலர்களையும் மொத்தம் ஆறு போலீசார்களை கூண்டோடு ஆயுதப் படைக்கு மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.