நடக்கும் என்பார் நடக்காது… கிடைக்கும் என்பார் கிடைக்காது…

0

அந்த நான்கு தொகுதிகளில் உங்கள் எம்பிக்களின் செயல்பாடுகள் சரியில்லை என்று காரணமும் கூறியதால் காங்கிரஸ் ஏகத்துக்கும் கடுகடுப்பில் உள்ளதாகக் கூறப்படுதாம் மஹா தெரியுமா? திமுக ஒதுக்கிய 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பான ‘ஜூம்’ மீட்டிங், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், எம்பிக்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி உட்பட்ட கட்சியின் முக்கிய புள்ளிகளுடன் நடந்தபோது, அந்த 4 தொகுதி விவகாரமும் வெடித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் நடந்த உரையாடல் குறித்து, கட்சி வட்டாரத்தில் கசிந்த தகவல் ஜூம் மீட்டிங்கில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, ‘திருச்சி, கரூர், ஆரணி, திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளை காங்கிரஸ்க்கு ஒதுக்க முடியாது’ என்று திமுக தரப்பில் திட்டவட்டமாக கூறிவிட்டார்கள் எனக கறாராக கூறியுள்ளனர். நமது எம்பிக்கள் சிலர் தொகுதியில் செயல்பாடு சரியில்லை என்பது திமுகவினரின் கருத்தாக உள்ளது. எனவே, மாற்றுத்தொகுதியை தேர்வு செய்ய வேண்டி அவசியம் ஏற்பட்டுள்ளது என்று பேசியுள்ளார்.

இதற்கு திருச்சி எம்பி திருநாவுக்கரசர், கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘எங்களது செயல்பாடு சரியில்லை என்பது தொடர்பான ஆதாரத்தை திமுக தரப்பில் வைத்துள்ள னரா? நமது கட்சியினரின் செயல்பாடு குறித்து திமுக எப்படி விமர்சனம் செய்யலாம்?’ என்று காரசாரமாக பேசினர்களாம்.

logo right

குறுக்கிட்ட சிதம்பரம், இதுதொடர்பாக புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு திமுக தரப்பில் பேசி யதாகவும், சில விஷயங்களை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதனால் கடுப்பான சிலர் உங்க மகன் பாஜகவில் சேரப்போகிறாரா பாஜகவிற்கு ஆதரவான கருத்துக்களையே கூறிவருகிறாரே அப்படினா அவருக்குத்தானே முதலில் சீட் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும்ம் என சில வீடியோ கிளிப்பிங்களை போட்டு காண்பித்தார்களாம்

இதைத்தொடர்ந்து தேசிய தலைவர் கார்கே தலைமையில் செல்வப்பெருந்தகை மற்றும் மாநில முக்கிய தலைவர் களுடன் திமுக உயர்மட்ட பேச்சுவார்த்தை குழுவுடன் மற்றொரு ஜூம் மீட்டிங் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுகவின் 4 தொகுதிகள் தொடர்பான அதிருப்தி கார்கே முன்னிலையில் பதிவு செய்யப்பட்டதாம். இதன்பின் தொகுதிகள் இறுதியாக இதுதான் முடிந்தால் இவற்றில் வேட்பாளர்களை நிறுத்த பாருங்கள் இல்லையேல் அந்த நான்கு தொகுதிகளுக்கும் நாங்களே வேட்பாளர்களை நிறுத்திக்கொள்கிறோம் எனக்கூறிவிட்டு மும்பை பறந்து விட்டாராம்.

இதானால் கடும் அப்செட்டில் இருப்பது மதிமுகவாம் ஒரே ஒரு இடம்தான் அதுவும் திருச்சிதான் என தெரிந்தும் பிரச்சாரத்தை தொடங்க முடியவில்லையே என கடும் கோபத்தில் இருப்பது ஒருபுறம், மலைக்கோட்டை மன்னன் நேரு தனது மகனை கரையேற்ற பெரம்பலூர் போயிடுவாரு என்னத்த செய்ய்யுறதுனு ’கை’யை பிசைந்து கொண்டிருக்கிறார்களாம்.

Leave A Reply

Your email address will not be published.