உன்னதமான உடல்தானம் செய்வீர் !
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மாதுலம்பாடி கணேசபுரத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் மகன் ஹரிஹரன் என்பவர் நேற்று விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து அன்னாரது உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த திட்டம் இன்னும் மக்களிடம் கொண்டு செல்லும் வண்ணம் பொதுமக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதோடு முக்கிய பிரமுகர்கள் என்றால் ஒரு மாதிரியாகவும் வேறு யாரோ என்றால் ஒரு மாதிரியாகவும் மரியாதை செய்யப்பட்டு அரசு மரியாதையை அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.