வெளியாகுமா லால் சலாம்…
ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் நடிக்கும் படம் ‘லால்சலாம்’. இதில் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஹீரோவாக நடிக்கிறார்கள். தன்யா பாலகிருஷ்ணன் ஒரு ஹீரோயினாக நடிக்கிறார். பாலகிருஷ்ணன் அவரை சமூகவலைதளங்களில் தமிழ் ரசிகர்கள் திட்டி தீர்க்கிறார்கள்.
தன்யா அப்படி என்ன செய்தார் என்று விசாரித்தால், பெங்களூரில் வசித்தவர் ஐபிஎல் போட்டி நடந்தபோது பெங்களூர் ஐபிஎல் (ஆர்சிபி) அணிக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழர்கள் குறித்தும் அவதுாறாக பதிவிட்டார். அந்த நேரத்தில் அது பெரும் சர்ச்சையானது. பின்னர், அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. சில ஆண்டுகளுக்குபின் இப்போது நடித்துள்ளார்.
தமிழர்களை தரக்குறைவாக பேசியவரை ஐஸ்வர்யா தனது படத்தில் நடிக்க வைக்கலாமா என்று பலர் பொங்குகிறார்கள்’ என்கின்றனர்.
‘ஏழாம் அறிவு’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’ போன்ற சில தமிழ்ப்படங்களில் தன்யா நடித்திருக்கிறார். ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்துள்ளார். தன்யாவால் ‘லால்சலாம்’ படக்குழுவுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.